பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1 |

துரம் போகக்கூடாது என்பதை மறந்துவிட் டேனே !' என்று கொஞ்சம் கலக்கமடைந்தது. இருந்தாலும், அந்தப் புலியிடமிருந்து எப்படி யாவது தப்ப வேண்டும் என்று ஒரு தந்திரம் செய்தது.

உடனே அது குதிரையின் காதில் மெது வாகச் சொல்லிற்று: இந்தப் புலியிடமிருந்து உயிர் தப்ப இதுதான் நல்ல வழி. நீ கீழே படுத்துக்கொள். நான் உன் முதுகிலே ஏறிக் கொள்கிறேன். உடனே நீ எழுந்து புலியை நோக்கி முன்னாலே பாய்ந்து செல். அதற்குப் பிறகு மற்றவற்றையெல்லாம் நான் கவனித்துக் கொள்கிறேன்' என்று குதிரையிடம் தன் தந்திரத்தை எடுத்துக் கூறிற்று.

குதிரைக்கு ஒரே பயம். அதன் கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தன. இருந்தாலும், கழுதையின் பேச்சைக் கேட்காமல் புலியிட மிருந்து உயிர் தப்பமுடியாது என்று எண்ணிக் கீழே படுத்தது. கடக்கிட்டி முடக்கிட்டி அதன் முதுகின் மேல் ஏறிக்கொண்டது.

உடனே குதிரை எழுந்து புலியை நோக்கி வேகமாக முன்னால் பாய்ந்தது. "ஆஹா! நல்ல வேட்டை கிடைத்தது. புலியைத் தின்று பல காளாயிற்று. இந்தப் புலி இப்போது எனக்குக் கிடைத்தது' என்று கடக்கிட்டி முடக்கிட்டி உரத்த குரலில் கூறிற்று. குதிரையோ முன்னால் பாய்ந்து பாய்ந்து வந்தது. அதனால் புலி பயந்துவிட்டது.