பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1 3

வோம். அப்பொழுது உங்களுக்கு ஆபத்து வந்தால் எனக்கும் வரும் அல்லவா? உங்களுக்கு வஞ்சனை செய்ய மாட்டேன். நான் வேண்டு மானாலும் முன்னாலே செல்லுகிறேன்' என்று குள்ளகரி உறுதி கூறிற்று. குள்ளநரிக்கு நல்ல பசி : அந்த இரண்டு விலங்குகளையும் விட்டு விட மனம் வரவில்லை.

'சரி, அப்படியே வாலை முடிந்துகொள் வோம். தோன் முன்னால் செல்ல வேண்டும்’ என்று புலி தயக்கத்தோடு பதில் அளித்தது. குள்ளநரி சொன்னவாறே இரண்டும் தங்கள் வாலை நன்றாக முடிந்துகொண்டன. பிறகு குள்ளநரி முன்னால் கடந்தது.

கடக்கிட்டிமுடக்கிட்டி இவற்றைக் கண்டதும் மறுபடியும் குதிரையின்மேல் ஒய்யாரமாக ஏறிக்கொண்டு உரத்த குரலில் பேசத் தொடங்கிற்று:

நரி மாமா, அந்தப் புலியை உன் வாலில் கட்டி இழுத்துக்கொண்டு வர இவ்வளவு நேரமா ? எனக்குப் பசி தாங்க முடியவில்லை. இழுத்து வா அந்தப் புலியை' என்று அது அதட்டும் குரலில் கூறிற்று. குதிரையும் முன்னால் பாய்ந்தது.

குள்ளநரி தன்னை வஞ்சகமாக ஏமாற்றி விட்டதாக நினைத்துப் புலி, உடனே காட்டுக்குள் ஒடத் தொடங்கிற்று. பாவம், குள்ளநரியின் வால் கெட்டியாகப் புலியின் வாலோடு முடியப்பட்டிருந்ததால் அது த ரை யி லு ம்