பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


↑ 8

தினால் உனக்கு நன்றிகூடச் சொல்லாமல் அவசரமாக வந்துவிட்டேன்,' என்றது குதிரை.

"அதைப்பற்றி இப்பொழுது பேசவேண் டாம், அண்ணே. நான் பட்டணம் பார்க்க வேண்டும்” என்றது கழுதை.

1 முதலில் நான் தின்னும் காகிதத்தை ருசி பார். பிறகு பட்டணம் பார்க்கலாம்' என்று குதிரை பெருமையாகத் தன் தீனியைப் பற்றிப் பேசிற்று. இந்த உணவு, காட்டில் கிடைக்குமா ?

'எனக்குக் காகிதம் தின்று பழக்கமில்லை. பச்சைப் புல்தான் பிடிக்கும். இருந்தாலும் ே ஆசையாகக் கொடுப்பதை வேண்டாம் என்று சொல்லலாமா ?' என்று கூறிவிட்டுக் கடக் கிட்டி முடக்கிட்டி சுவரொட்டிக் காகிதத்தை வாயில் வைத்தது.

ஏதோ ஒரு நாற்றமெடுத்த பசையை அதில் தடவிச் சுவரில் ஒட்டியிருந்தார்கள். கடக்கிட்டி முடக்கிட்டிக்கு அது கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை. ஒரே குமட்டலாக வந்தது. "அண்ணே, இதுதானா உங்கள் பட்டணத்து விருந்து ?' என்று முகத்தைச் சுளித்துக் கொண்டு அது கேட்டது.

அந்தச் சமயத்தில் சுவரொட்டி ஒட்டுகின்ற சிறுவர்கள் மூன்று பேர் அங்கு வந்து சேர்க் தார்கள். "இந்தக் கிழட்டுக்குதிரை காம் ஒட்டு வதையெல்லாம் தின்றுவிடுகிறது. இதைக்