பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


§ 9

கல்லெடுத்து விரட்டுங்கடா என்றான் ஒரு சிறுவன்.

பிறகு சொல்லவா வேண்டும் ? ஆளுக்கு ஒரு கல்லைத் துரக்கி வீசினார்கள். கிழக் குதிரை கல்லடிக்குத் தப்புவதற்காகத் தெரு வின் குறுக்கே ஒடப் பார்த்தது. எதிர்பாராத விதமாகக் குறுக்கே அது ஒடியதால் வேகமாக வந்த பஸ் ஒன்று அதன்மேல் மோதிவிட்டது. குதிரை தடால் என்று கீழே விழுக்தது மிகவும் மெலிந்து கிடந்த அந்தக் கிழட்டுக் குதிரையால் அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. அதன் வாயிலிருந்து ரத்தம் வழிந்தது.கொஞ்ச நேரத்தில் அதன் உயிர் பிரிந்தது.

'இதுதானா உங்கள் ப ட் ட ண த் து வாழ்க்கை? மோட்டார் வண்டிச் சத்தம் காட்டில் கேட்கவில்லையே என்று இங்கு வந்தாய். அந்த மோட்டாரே உனக்கு எமனாக வந்துவிட்டது” என்று கண்ணிர் வடித்துக்கொண்டே கடக் கிட்டி முடக்கிட்டி சத்திரத்தை நோக்கி எச்சரிக்கையோடு நடந்தது. பட்டணம் பார்த் தது போதும் என்றாகிவிட்டது அதற்கு. அது சத்திரத்தை அடைவதற்கும் கிழவன் விழிப்ப தற்கும் சரியாக இருந்தது.