பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


21

செய்தது. பட்டணம் பார்க்கும் ஆசையெல் லாம் இப்பொழுது அதற்கு இல்லை.

அந்தச் சமயத்திலே பக்கத்திலே பாண்டு வாத்தியம் திடீரென்று முழங்க ஆரம்பித்தது. புதிதாக ஒரு பெரிய டேரா போட்டிருப்பதை யும் அது பார்த்து ஆச்சரியமடைந்தது. டேரா உயரமாக இருந்ததால் சத்திரத்திலிருந்தே நன்றாகத் தெரிந்தது. அங்கு என்னதான் நடக் கிறது என்பதை எட்டிப் பார்த்துவிட்டு வந்து விடலாம் என்று கடக்கிட்டி முடக்கிட்டி புறப் பட்டது.

டேராவுக்கு முன்னால் பாண்டு வாத்தியக் காரர்கள் உற்சாகமாகக் கடலலைகளின் சத்தம் தோற்றுப்போகும்படி தங்கள் வாத்தி யங்களை வாசித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு பக்கத்தில் எத்தனையோ குதிரைகள், யானை கள், குரங்குகள், நாய்கள் எல்லாம் தயாராக |கின்றுகொண்டிருந்தன. சிங்கம், புலி முதலிய வி லங் கு க ளு ம் கூண்டில் தனித்தனியாக அடைக்கப்பட்டிருந்தன.

அது ஒரு பெரிய சர்க்கஸ் கம்பெனி என்று கடக்கிட்டி முடக்கிட்டி தெரிந்துகொண்டது. அன்று ஞாயிற்றுக்கிழமை ஆகையால் மூன்று மணிக்கே முதல் காட்சியைத் தொடங்கினார் கள். சிறுவர்களும் சிறுமிகளும் ஆவலோடு வந்து கூடிக்கொண்டிருந்தார்கள்.

அத்தனை விலங்குகளும் என்னதான் செய் யப்போகின்றன என்று பார்த்துவிடவேண்டும்