பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

அந்தச் சத்திரத்திலே படுத்துத் தூங்க வருவதுபோலப் பாசாங்கு செய்துகொண்டிருந்த நான்கு திருடர்கள் இதைக் கவனித்தார்கள். உடனே மெதுவாக இந்தப் பையை எடுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு நழுவி விட்டார்கள்.

கடக்கிட்டி முடக்கிட்டி இதைப் பார்த்துக் கொண்டே இருந்தது. அதற்குக் கோபம் கோபமாக வந்தது. இருந்தாலும் அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கிழவனை எழுப்பிவிட்டால் திருடர்களைப் பிடிக்கமுடியும் என்று எண்ணி, அது கிழவன் பக்கத்தில் சென்று நின்றுகொண்டு கத்திற்று.

தன் தூக்கத்தை அது கலைத்துவிட்டது என்று நினைத்துக் கிழவன் அதைத் தன் கைத்தடியால் இரண்டு அடி ஓங்கி அடித்து விட்டு மறுபடியும் படுத்துத் தூங்கலானான். பாவம். வலி பொறுக்க முடியாமல் கடக்கிட்டி முடக்கிட்டி முனகிக்கொண்டிருந்தது. அதன் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

கிழவன் மாலை நான்கு மணி அளவில் தூக்கங் கலைந்து எழுந்தான். அப்பொழுதுதான் அவன் தன் பையை யாரோ திருடிக் கொண்டு போய்விட்டார்கள் என்பதை அறிந்தான். கிழவன் தூங்கும்போது என்றுமே கத்தாத கழுதை அன்று எதற்காகக் கத்திற்று என்பதை அவன் தெரிந்து கொண்டு பெரிதும் விசனப்பட்டான். அதன் முதுகை மெதுவாகத்