பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

சண்டை நடந்த சத்தம் கேட்டுக் கிழவன் விழித்துக்கொண்டான். ஆனால், இந்தச் சண்டையில் கலந்துகொள்ளாமல் தூங்குவது போலவே படுத்துக் கிடந்தான்.

திருடர்கள் மயக்கம் போட்டு விழுந்ததைக் கண்டதும் கிழவன் எழுந்து வந்து. அவர்களுடைய கைகளையும் கால்களையும் நன்றாகக் கட்டிவிட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு வேகமாக நடந்தான்.

இதற்குள் பொழுது விடிந்துவிட்டது. நான்கு திருடர்களும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அவமானம் அடைந்தார்கள்.

"அண்ணே. நாங்கள் செய்தது தப்புத்தான். முதலில் இப்போது தப்பி ஓடுவதற்கு வழி தேடுவோம். பக்கத்தில் புரண்டு வந்தால் நான் மெதுவாகக் கட்டை அவிழ்த்து விடுகிறேன். பிறகு எல்லோரும் கிழவன் வருவதற்குள் ஓடிவிடலாம்" என்றான் ஒரு திருடன்.

"அது தான் நல்லது" என்று மற்றவர்களும் நினைத்தார்கள். மெதுவாக ஒருவர் பக்கத்தில் ஒருவராகப் புரண்டு வர முயற்சி செய்தார்கள்.

ஆனால் அவர்கள் முயற்சி பலிக்கவில்லை. கடக்கிட்டி முடக்கிட்டி தன் பின்னங்கால்களால் நகருகின்ற ஒவ்வொரு திருடனுடைய கலையிலும் 'படீர் படீர்' என்று உதைக்கத் தொடங்கிற்று. அதனால் திருடர்கள் மறு