பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4. 7

விட்டிருப்போம். இப்பொழுதே எங்களுக்குப் பாதி உயிர் போய்விட்டது. நல்ல வேளையாக நீங்கள் உண்மையை எடுத்துச் சொன்னீர்கள்' என்று கூறி, அவைகள் கடக்கிட்டி முடக்கிட்டி யிடம் நிறைந்த அ ன் பு ம் மரியாதையும் காட்டின.

அத்துடன், 'நீங்கள் காட்டிற்குள்ளே எங்கு வேண்டுமானாலும் வந்து பசும்புல் மேயலாம். நீங்கள் அப்படி வருவதை காங்கள் ஒரு பெருமையாக எண்ணுவோம்' என்று எல்லா விலங்குகளும் ஒரே மூச்சில் முழங்கின.

கடக்கிட்டி முடக்கிட்டி அன்று முதல் காட்டிற் குள் புகுந்து, அச்சயில்லாமல் பசும்புல் மேய்ந்து, நன்றாகக் கொழுத்து வளர்ந்தது. அப்படி மேயும்போது இடையிடையே காட்டுவிலங்கு களில் சில அதனுடன் பேச்சுக் கொடுக்க ஆவலுடன் வரும். அவற்றோடு பேசிக் கொண்டே கடக்கிட்டி முடக்கிட்டி மேயும்.

நன்றாகக் கொழுத்து வளர்ந்துவிட்டதால் கடக்கிட்டி முடக்கிட்டிக்கு இப்பொழுதெல்லாம் விறகு சுமப்பதுகூட எளிதாக முடிந்தது.