பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1
கடக்கிட்டி முடக்கிட்டி

வயதான கிழவன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் ஏழை. அவனுக்கு உதவி செய்பவர்கள் யாருமே இல்லை. அதனால் அவன் தானே பாடுபட்டுப் பணம் சம்பாதித்தால்தான் பிழைக்க முடியும்.

அவன் ஒரு அடர்ந்த காட்டுக்குப் பக்கத்தில் சிறிய குடிசை ஒன்று போட்டுக்கொண்டான். அந்தக் காட்டில் நாள் தோறும் விறகு ஒடித்து வருவான். பிறகு அதைச் சுமையாகக் கட்டுவான். பக்கத்தில் இருந்த ஒரு பட்டணத்தில் அதை விற்று, அதனால் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வயிறு வளர்த்து வந்தான்.