பக்கம்:கடற்கரையினிலே.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20. பாரதியார்

மிழ் நாட்டுக்குப் புத்துயிரும் வாழ்வும் அளித்தவர் பாரதியார். பாருக்குள்ளே நல்ல நாடு - பண்பும் பழமையும் வாய்ந்த நாடு - பாரதப் பெருநாடு உரிமை இழந்து, பெருமை குன்றி, வெள்ளையாட்சியில் குறுகி நின்ற நிலை கண்டு அவர் மனம் கொதித்தார். 'இம் என்றால் சிறை வாசம்; ஏன் என்றால் வனவாசம்' என்பதை நன்றாக அறிந்திருந்தும் வெள்ளையர் ஆட்சியை எதிர்த்தார் அவ்வீரர்; பாட்டாலும் உரையாலும் தமிழ் நாட்டாரைத் தட்டி எழுப்பி வீர சுதந்தர வேட்கையை ஊட்டினார்.

சென்னையம் பதியின் கண்ணென விளங்கும் திருவல்லிக்கேணியிலே பல்லாண்டு வாழ்ந்தார் பாரதியார்; நாள்தோறும் அந்திமாலையில் கடற்கரையிலே நின்று ஆவேசமாய்ப் பாடுவார்; ஒருநாள் அக்கடலை நோக்கி ஆர்வமுறப் பேசலுற்றார்;

“அருந்தமிழ்க் கடலே ! இன்று உன்னைக் காண ஏனோ என் உள்ளம் களிக்கின்றது ! நீள நினைந்து நெஞ்சம் தழைக்கின்றது ! 'எங்கள் அருமைத் தமிழகத்தை வாழ்விக்க வந்த வள்ளுவர் முன்னாளில் உன்னைக் கண்டார்; உன் காற்றை உண்டார்; உன் கரையில் உலாவினார்' என்று எண்ணும் பொழுது இன்பம் பொங்குகின்றது என்