பக்கம்:கடற்கரையினிலே.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

கடற்கரையிலே


'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற பரந்த கொள்கையைப் பழித்து நிற்பது வெள்ளையர் ஆட்சி. அது வீழ்ந்தே தீரும்.

"என் அருமைத் தமிழ்க் கடலே! அது விழுகின்ற நாளிலே பாரத சமுதாயம் ஒன்றுபட்டு வாழும். சாதிப் பூசல்கள் ஒழியும்; சமயப் பிணக்கங்கள் அழியும்; தமிழ்நாடு தலையெடுக்கும். அப்போது,

“உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம் . வீனில்
உண்டுகளித் திருப்போரை
நிந்தனை செய்வோம்"

என்று ஆடுவோம்; பள்ளுப் பாடுவோம்; 'ஆனந்த சுதந்தரம் அடைத்து விட்டோம்' என்று அகம் களித்து இக்கடற்கரையில் இறுமாந்து உலாவுவோம்" என்று ஏறுபோல் நடந்து சென்றார் பாரதியார்.


***