பக்கம்:கடற்கரையினிலே.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



3. நக்கீரர்



தென்பாண்டி நாட்டுக் கடற்கரையிலே தெய்வ மணங்கமழ்ந்து திகழ்வது செந்தில் என்னும் திருச்செந்தூர், அங்கு அலை பாட மயில் ஆடும்; அகம் உருக அருள் பெருகும். ஒரு நாள் காலைப் பொழுதிலே அக்கடற்கரையில் வந்து நின்றார் நற்றமிழ் வல்ல நக்கீரர். தமிழ் ஆர்வம் அவர் மனத்திலே பொங்கி எழுந்தது. திருச்சீர் அலைவாய் என்ற ஆலயத்தின் அருகே நின்று அவர் பேசலுற்றார்

"அருந்தமிழ்க் கடலே ! உன்னைக் காணப்பெறாது பன்னாள் வருந்தினேன். ஆயினும், எந்நாளும் உன்னை மறந்தறியேன். ஐந்தாறு நாளைக்கு முன்னே உன் பெருமையை ஒரு பழைய ஏட்டிலே கண்டேன்; ஆனந்தம் கொண்டேன். உன் அலைகளின் அழகும், அலைவாயில் அமைந்த ஆலயத்தின் சிறப்பும், ஆலயத்தையடுத்த மணல் மேட்டின் மாண்பும் எத்துணை அருமையாக ஒரு பாட்டிலே படம் எடுத்துக் காட்டப்படுகின்றன ! அப் பாட்டின் நயங்களைச் சங்கப் புலவரும் பாராட்டினர். மதுரை மாநகரில் அரசு புரிந்த நன்மாறன் என்ற பாண்டியனை வாழ்த்துவது அப்பாட்டு, "நன்மாறனே! நீ பல்லாண்டு வாழ்க, கந்தவேள் வீற்றிருக்கும் செந்திலம்பதியில் உள்ள மேட்டு மணலினும் பலவாக நின் வாழ்நாள் நிறைக" என்று வாழ்த்தினான் இளநாகன். அவன் மதுரைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/14&oldid=1247432" இலிருந்து மீள்விக்கப்பட்டது