பக்கம்:கடற்கரையினிலே.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நக்கீரர்

45" உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகை
கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
 வேலப்பா செந்தில் வாழ்வே"

என்று என் அத்தனை நித்தலும் கைதொழுவேன்.

“அலைவாயில் அமர்ந்தருளும் அண்ணலே ! செந்திலம் பதியைப் படைவீடாகக் கொண்ட கந்தப் பெருமானே ! உன்னைக் கலியுக வரதன் என்பார்; கடற்கரை யாண்டி என்பார்; அரந்தை கெடுத்து வரந்தரும் ஆண்டவன் என்பார்; செட்டி கப்பலுக்குச் செந்தூரான் துணை என்பார். இன்று போலவே என்றும், எம்பெருமானே ! கடற்கரையில் நின்று நின் அடியாரைக் காத்தருளல்வேண்டும். தமிழ் மக்களெல்லாம் நின் அடைக்கலம்" என்று காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கிக் கடற்கரையை விட்டகன்றார் நக்கீரர்.