பக்கம்:கடற்கரையினிலே.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பரணர்

19


டகரம் அவர் நாவில் ஒருபோதும் சரியாக வாராது. முசிறிக் கடற்கரையிலே அவர் குழறும் தமிழைக் கேட்பதும் ஒருவகை இன்பந்தான்.

" செல்வத் துறைமுகமே ! உன் கடற்கரையிலே செந்தமிழ் சிதைந்து வழங்கினாலும் பழுதில்லை. உன் நாடு பொன்னாடு ஆவது கண்டு என் உள்ளம் குளிர்கின்றது. பொன்னுடையான் சேரன்; புகழுடையான் சேரன்; அம்மன்னன் நீடூழி வாழ்க" என்று செங்குட்டுவனை வாயார வாழ்த்தி விடைகொண்டார் பரணர்.









1. " மலைத்தாரமும் கடல்தாரமும்

தலைப்பெய்து வருநர்க்கு யாவும்
பொலந்தார்க் குட்டுவன்
முழங்குகடல் முழவின் முசிறி"

- புறநானூறு : பரணர் பாட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/21&oldid=1247491" இலிருந்து மீள்விக்கப்பட்டது