பக்கம்:கடற்கரையினிலே.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. சாத்தனார்



சோழ நாட்டிலுள்ள காவிரிப் பூம்பட்டினம் முன்னொரு காலத்தில் உலகறிந்த பெரு நகரம். கண்ணகியென்னும் வீர மாபத்தினியைத் தமிழ்நாட்டுக்குத் தந்த திருநகரம் அதுவே. அந்நகரின் அழகிய கடற்கரையை வந்தடைந்தார் மணிமேகலை ஆசிரியராகிய சாத்தனார். அலை அலையாகப் பல எண்ணங்கள் அவர் உள்ளத்தில் எழுந்தன. பெருங்கடலை நோக்கி அவர் பேசலுற்றார்:

"சோழ நாட்டுச் செழுங்கடலே ! கங்கையினும் சிறந்த காவிரியாற்றின் நீரால் நீ நாளும் புனிதமடைகின்றாய். குடமலையிலே பிறந்து, கருநாட்டிலே தவழ்ந்து, தமிழ்த் திருநாட்டிலே நடந்து, உன்னை நோக்கி விரைந்து வரும் காவிரியைப் புகழாத கவிஞரும் உளரோ? அந்த ஆற்றுமுகத்திலே வீற்றிருப்பது நின் அருமைத் திருநகரம். இந்நகரின் அழகைக் கண்ணாற் பருகிக் களிப்புற்ற அறிஞர் 'காவிரிப்பூம்பட்டினம் என்றும் பூம்புகார் நகரம் என்றும்' அழைத்தார்களே !

"பாடல் பெற்ற பட்டினமே ! உன் அழகுக்கு அழகு செய்தான் திருமாவளவன் என்னும் சோழமன்னன். இந்நாட்டையாண்ட ஆதியரசர்களில் தலைசிறந்தவன் அவனே; தமிழகத்திற்கு ஏற்றமும் தோற்றமும் அளித்த


1. பூ - அழகு ;பூம்பட்டினம் - The city of beautiful

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/22&oldid=1247499" இலிருந்து மீள்விக்கப்பட்டது