பக்கம்:கடற்கரையினிலே.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

கடற்கரையிலே


அழியுந் தன்மை வாய்ந்த செல்வத்தை அற்றார்க்கும் ஆதுலர்க்கும் கொடுத்து, அழியாத அறமாக மாற்றிக் கொள்வதன்றோ அறிவுடைமையாகும்?

நற்றவர் வாழும் ஒற்றியூரே ! என்னையாளும் இறைவன் கருணையால் உறுதிப்பொருள் இன்னதென்றுணர்ந்தேன். காவிரிப் பூம்பட்டினத்தில் கடல் வாணிகத்தால் வந்த பொருளைக் கண்டு களிப்புற்றிருந்த என்னைக் கரையேற்றத் திருவுளங் கொண்டான் ஒற்றியூருடைய இறைவன்; ஒரு சீட்டைக் காட்டி என்னை ஆட்கொண்டான். 'காதற்ற ஊசியும் வாராது கானும் கடைவழிக்கே' என்னும் அருமைத் திருமொழியால் என்னுள்ளத்தை உருக்கினான். காதற்ற ஊசியைக் காட்டி என்னைக் கடைத்தேற்றினானே !

“ஒற்றியூரே ! உன் பெருமையை அவன் அருளால் உணர்ந்தேன். 'நீயே சிவலோகம் என்று அறிந்தேன். என் உள்ளம் கவர்ந்த ஒற்றியே ! வாழி; என்னைத் தாங்கும் ஒற்றியே ! வாழி; உலவாப் பெரும் பெயர் ஒற்றியே ! வாழி' என்று வாழ்த்திக்கொண்டு ஆழிக்கரையை விட்டகன்றார் இருவினைக் கட்டறுத்த பட்டினத்தார்.


1. வாவிஎல்லாம் தீர்த்தம், மணல்எல்லாம் வெண்ணீறு

காவனங்கள் எல்லாம் கணநாதர் - பூவுலகில்
ஈது சிவலோகம் என்றென்றே மெய்த்தவத்தோர்
ஒதும் திருவொற்றி யூர்."

- பட்டினத்தார் பாடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/44&oldid=1248497" இலிருந்து மீள்விக்கப்பட்டது