பக்கம்:கடற்கரையினிலே.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. பண்டித சோழன்


மிழ் நாட்டுத் துறைமுக நகரங்களுள் ஒன்று நாகபட்டினம். நாகர் என்ற பழந் தமிழ்க் குலத்தார் ஒரு காலத்தில் அங்கே சிறப்புற்று வாழ்ந்திருந்தார் என்பர். சோழ நாட்டின் தலைநகராகிய காவிரிப்பூம்பட்டினம் ஆழிவாய்ப்பட்டு அழிந்த பின்னர் நாகபட்டினம் தலையெடுத்தது; வாணிகத்தால் வளமுற்றது. தஞ்சையைத் தலைநகராகக்கொண்ட சோழமன்னர் நாகையைத் திருத்தி வளர்த்தனர். அம்மன்னரில் தலைசிறந்தவன் இராஜேந்திரன். அவன் தன் நிலப் படையால் கங்கை வரையுள்ள நாடுகளை வென்றான். கப்பற்படையால் கடாரம் முதலிய பல தேசங்களை வென்றான். அவ்வெற்றித் திறனை வியந்து 'கங்கை கொண்டான்' என்றும், 'கடாரம் கொண்டான் என்றும் அவனைத் தமிழகம் பாராட்டியது. தமிழ்ச்சுவை யறிந்த அம்மன்னனைப் பண்டித சோழன் என்று கலைவாணர் கொண்டாடினர். இத்தகைய காவலன் நாகை மாநகர்க்கு ஒருகால் எழுந்தருளியபோது அந்நகரம் ஒகையுற்று எழுந்தது; கடற்கரையில் விண்ணளாவிய பந்தலிட்டு வரவேற்றது. அக்காட்சியைக் கண்டு பெருமகிழ்ச்சியுற்ற மன்னவன் பேசலுற்றான்:

"நல்லோர் ஏத்தும் நாகை மாநகரே ! என்றும் உள்ள தமிழகத்தில் நீ தொன்றுதொட்டு இருந்து வருகின்றாய். சோழ நாட்டுக் கடற்கரை நகரங்களுள் இன்று நீயே