58
கடற்கரையிலே
"முத்து விளைக்கும் முந்நீரே ! அறவோனாகிய அப்பெருமானைக் கண்டு நீ அன்பு கொண்டாய் ! மெல்லிய தென்றலால் வரவேற்றாய்; அழகிய முத்துகளைத் கையுறையாக உன் கரையிலே வைத்தாய்; அந்தோ வந்தவன் மன நிலையறியாது நடந்து கொண்டாயே! உன் வரவேற்பு வெந்த புண்ணில் வேல் எறிந்தாற்போல் அவ்வள்ளலை வாட்டி வருத்துகின்றதே; எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்த்துவிட்டாயே! நீ விடுத்த மெல்லிய பூங்காற்று அவன் மேனியை வெதுப்புகின்றதே! நஞ்சுபோல் நலிகின்றதே ! அதற்கும் மேலாக உன் முத்துகள் சீதையின் முறுவலை நினைப்பூட்டி, கனலொடு காற்றும் கலந்தாற்போல் கடுவேகத்தை அவன் மனத்தில் ஊட்டி விட்டனவே!
" துர மில்லை மயில்இருந்த
சூழல் என்று மனம்செல்ல
வீர வில்லி நெடுமானம்
வெல்ல நாளும் மெலிவானுக்கு
ஈர மில்லா நிருதரோடு
என்ன உறவுண்டு உனக்குஏழை
மூரல் முறுவல் குறிகாட்டி
முத்தே உலகை முடிப்பாயோ?"
"தென் கடல் முத்தே ! நீரிலே பிறந்து, நீரிலே வளர்ந்த உனக்கு ஈரமில்லாத அரக்கரோடு எப்படி உறவு உண்டாயிற்று? உனக்கும் அவர்க்கும் ஒருவித உடன்பாடும் இல்லையே! பண்பாடற்ற அரக்கரோடு சேர்ந்து ஐயன் மனத்தைப் புண்படுத்திவிட்டாயே ! தன்னோடு சீதை கானகம் நோக்கிப் புறப்படும் பொழுது,
- கம்பராமாயணம் - கடல் காண் படலம்