பக்கம்:கடற்கரையினிலே.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13. தாயுமானவர்


திருமறைக்காடு என்பது சோழ மண்டலக் கரையிலுள்ள பெருமை வாய்ந்த பழம்பதிகளில் ஒன்று. தமிழர் வாழும் இலங்கையைத் தண்ணளியோடு நோக்கி நிற்பது அதன் துறைமுகம். இந்நாளில் அது வேதாரண்யம் என்று அழைக்கப்படுகின்றது. அவ்வூரிலே தோன்றினார் தாயுமானவர் என்று தமிழகம் போற்றும் சிவஞானச் செல்வர். கற்று அறிந்து அடங்கிய அப்பெரியார், திருச்சிராப்பள்ளி முதலிய பல ஊர்களில் உள்ளத் துறவியராய் வாழ்ந்து, இறுதியில் தம் பிறப்பிடமாகிய திருமறைக்காட்டைத் தரிசிக்க வந்திருந்தபோது அங்குள்ள பழங்கடலை நோக்கிப் பேசலுற்றார் :

"மறைக்காட்டுத் திரைக்கடலே ! இம்மண்ணுலகில் நீரிலும் நிலத்திலும் வாழ்கின்ற உயிரினங்களிலே தலைசிறந்தவர் மானிடர் அல்லரோ ! 'அரிது அரிது மானிடர் ஆதல் அரிது’ என்பதில் ஐயமுண்டோ? ஆயினும், அப்பிறப்பின் மேன்மையை மானிடர் அறிந்தனரா? பெரும்பாலோர் அன்ன விசாரம் அதுவே விசாரமாக அலைந்து திரிகின்றார்களே ! இதனை வாழ்வு என்று சொல்லலாமா? சிறப்பாகப் பகுத்தறிவு பெற்ற மாந்தர், குறிக்கோள் இல்லாது வாழலாமா? வயிறு