பக்கம்:கடற்கரையினிலே.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாயுமானவர்

61


வளர்ப்பதையே தம் தொழிலாகக் கொண்டு வாழ்நாளை வறிதாகக் கழிக்கலாமா? உயிர் வாழ்வதற்காக உண்பதும், உண்பதற்காக உயிர் வாழ்வதும் உயரிய செயலாகுமா? மனிதப்பிறப்பின் பெருமையை நினைத்துப் பார்ப்பவர் எத்தனை பேர்? 'நான் யார்' என்று சிந்திப்பவர் எத்தனை பேர்? "இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ? ஏது வருமோ?” என்று எண்ணிப் பார்ப்பவர் எத்தனை பேர்? 'யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும் உறங்குவதுமின்றி” மற்றொன்றும் காணாத மாந்தர் பலரல்லரோ?

"நேர்மையுள்ள நெடுங்கடலே ! மனித இனத்தில் கற்றவர் மேலோர் என்றும், மற்றவர் கீழோர் என்றும் கருதப்பெறுவர். ஆயினும் கற்றவர் எல்லாம் மெய்யறிவு பெற்ற மேலோர் என்று சொல்ல முடியுமா? கற்ற கல்வியால் கர்வமுற்று, பொய்யை மெய்யாகவும், மெய்யைப் பொய்யாகவும், மாற்றி மருட்டும் மாந்தரும் உளரே ! வித்தையின் மதுகையால் நாத்திகம் பேசி நாத்தழும்பேறும் அறிஞரும் உளரே ! வாது செய்வதும் பேது செய்வதும் வாக்கு வன்மையால் இயலுமல்லவா ! இத்தகைய வித்தகரால் விளையும் தீமையை அளவிட்டுரைக்கலாகுமோ ! இதைக் கருதும்பொழுது 'கல்லாத பேர்களே நல்லவர்கள்' என்று சொல்லுதல் தவறாகுமோ?

"ஆழ்ந்து அகன்ற பெருங்கடலே ! நெடுங்கடல் என்றும் பெருங்கடல் என்றும் பேசப்படுகின்றாய் நீ ! பொங்கி எழுகின்றாய்; விழுகின்றாய் ! உனக்குக் கங்கு கரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/63&oldid=1248509" இலிருந்து மீள்விக்கப்பட்டது