பக்கம்:கடற்கரையினிலே.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

கடற்கரையிலே


இல்லை. "மாந்தர் கட்டுகின்ற ஏரிக்கும் குளத்திற்கும் கரையுண்டு; மட்டற்ற வெள்ளமுடைய நீ, கரையொன்றும் இன்றிக் கட்டுப்பட்டு நிற்கின்றாயே! இஃது இறைவன் செயல் அன்றோ? அவன் ஆணையால் உலகம் இயங்குகின்றது என்பதற்கு நீயும் ஓர் அடையாளமாய் நிலவுகின்றாயே அவனன்றி ஒர்அணுவும் அசையாது என்ற ஆப்தர் மொழியை நீயும் மெய்ப்பிக்கின்றாயே!

"கத்தும் கருங்கடலே! அந்தோ! உனது ஆரவாரம் எனக்குப் பிடிக்கவில்லை. அல்லும் பகலும் நீ அலறுகின்றாயே ! அமைதியில் உனக்கு அணுவளவும் நாட்டமில்லையே !கம்மா இருக்கின்ற சுகத்தை நீ அறிந்தாயல்லை ! பேசாத நிலையன்றோ பெருநிலை? அத்திலையை நாடுகின்றது என் உள்ளம். 'சும்மா இரு' என்று எல்லோரும் சொல்லுவர். சொல்லுதல் யார்க்கும் எளிது; சும்மா இருக்கும் செயலோ மிக அரிது. மத யானையை மடக்கலாம். மற்றைய விலங்குகளை அடக்கலாம். கனல் மேல் இருக்கலாம்; புனல் மேல் நடக்கலாம். ஆனால் சிந்தையை அடக்கிச் சும்மா இருக்கின்ற திறம் அரிது, அரிது. அத்திறம் பெற்றவர் கோடியில் ஒருவரே என்று கூறவும் வேண்டுமோ?

“அருந்தமிழ்க் கடலே இத்தமிழ்நாடு தெய்வத் திருதாடு, செயற்கரிய செய்யும் சீலர் நிறைந்த நாடு; மோன


★ "உரையிறந்து பெருமை பெற்றுத்

திரைக்கை நீட்டி
ஒலிக்கின்ற கடலே ! இவ்
வுலகம் சூழக்
கரையின்றி வைத்தார் யாரோ?”

- தாயுமானவர் பாடல்