பக்கம்:கடற்கரையினிலே.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

கடற்கரையிலே


காணவந்தார். மாலைப்பொழுது. நான் இன்று போலவே அன்றும் இக்கடற்கரையில் உலாவிக்கொண்டிருந்தேன். அவர் வந்ததும் தேன்மடை திறந்தாற் போல் பாடத் தொடங்கினார். நெடுங்கடலே ! உன் மெல்லிய காற்றினும் இனிமையா யிருந்தது அவர் பாடிய தெள்ளிய தமிழ்ப்பாட்டு. அப்போது நான் நடையை மறந்தேன்; கடையை மறந்தேன்; ஆனந்த பரவசனாயினேன். அந்நிலையைக் கண்டார் கவிஞர்; அளவிறந்த அன்பு கொண்டு என்னைப்பற்றியே ஒரு பாட்டுப் பாடிவிட்டார்:

"புதுவைப் பெருங்கடலே ! இப்போது புதுச்சேரி புத்துயிர் பெற்று வருகின்றது; வர்த்தகத்தால் வளம் பெருகுகின்றது; குச்சு வீடுகள், மச்சு வீடுகளாகின்றன. புதியவாகப் பல பேட்டைகள் உண்டாகின்றன. ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் வாணிகத் துறையிலே போட்டியிடுகின்றனர். இரு திறத்தாரும் தங்கள் பெயரை இத்தமிழ்நாட்டில் நிலைநாட்ட ஆசைப்படுகிறார்கள். ஆங்கிலேயரின் வர்த்தக நிலையமாகிய சென்னையில் 'காலட்' என்பவர் சிறிது காலம் கவர்னராயிருந்தார்; நெசவுத் தொழிலைப் பேணி வளர்ப்பதற்காக நல்ல நீரும்


"உலங்கொண்ட மணிப்புயனே! பிரம்பூர்ஆ

னந்தரங்கா ! உன்பாற் செல்ல

வலங்கொண்ட கருடனையாம் இடங்கண்டோம்

எழில்நரையான் வலத்தே கண்டோம்

பொலங்கொண்ட மணிமாட மீமிசையில்

புயல்தவழும் புதுவை யென்னும்

தலங்கண்டோம் நினதுநகை முகங்கண்டோம்

இனிவேண்டும் தனம்கண் டோமே !”

- பெருந்தொகை, 1357.