பக்கம்:கடற்கரையினிலே.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்த ரங்கர்

73


பல உண்டு. அவற்றை யெல்லாம் என் நாட்குறிப்பிலே நான் எழுதிவைக்கத் தொடங்கினேன். அவ்விதம் குறித்து வைப்பதில் ஒரு கருத்தும் எனக்கில்லை. பசித்தவன் பழங்கணக்கைப் பார்ப்பது போல் வேலையற்ற வேளைகளில் என் நாட்குறிப்பைப் பார்த்துப் பொழுது போக்குவேன். இக்காலம் மிகக் குழப்பமான காலம்; முத்திறத்தார் ஆதிக்கம் பெற முயலும் காலம்; மகமதியரும் ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் ஒருவரை ஒருவர் ஆள்வினையாலும் சூழ்வினையாலும் வென்று உயரக் கருதும் காலம். இந்தக் காலத்தில் டூப்ளே கவர்னராக வந்தது புதுவைக்கு ஒரு நல்ல காலம் !

புகழார்ந்த புதுவைக் கடலே ! தென்னாட்டிலே பிரெஞ்சு ஆட்சியை நிறுவ ஆசைப்பட்டார் டூப்ளே; மகமதிய நவாப்போடு அரசியலில் சதுரங்கம் ஆடினார்; சென்னையில் இருந்த ஆங்கிலேயர்மீது கப்பற்படை கொண்டு சாடினார். பிரெஞ்சுப் படை வென்றது. சென்னைக் கோட்டையிலே பிரெஞ்சுக் கொடி பறந்தது; டுப்ளேயின் புகழ் உயர்ந்தது. பிரெஞ்சுக் கொடியை வணங்கிப் பணியாத ஆங்கிலப் படைவீரரை யெல்லாம் சிறைப்பிடித்துப் புதுவைக்குக் கொண்டுவரும்படி ஆணை பிறந்தது. சென்னைக் கவர்னராயிருந்த மார்ஸ் என்பவரும் அவர் பரிவாரமும் இப்புதுவைத் துறைமுகத்திற்குக் கொண்டுவரப் பெற்றனர்; ஆங்கிலக் கவர்னருக்கு மரியாதை காட்டி வரவேற்கக் கருதியவர் போல் டூப்ளே ஆடம்பரமாக இத்துறைமுகத்திற்கு வந்தார். அம்மம்மா! அப்பொழுது இக்கடற்கரையிலே கூடியிருந்த மக்களுக்குக் கணக்குண்டா? ஆரவாரத்திற்கு ஓர் அளவுண்டா? புதுவைக் கடலினும் பெரிதாகப் பெருமுழக்கம் செய்த மக்களைக் கண்டு டுப்ளே மனங்குளிர்ந்தார்; மார்ஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/75&oldid=1248531" இலிருந்து மீள்விக்கப்பட்டது