உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கடற்கரையினிலே.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உமறுப் புலவர்

77


என்பது அவரிடம் சிறிதும் இல்லை. உதவி பெற வந்தவர்க்கு 'இல்லை' என்ற சொல் அவர் வாயினின்று எந்நாளும் வந்ததில்லை; காட்சிக்கு எளியராய், கருணையே உருவமாய் விளங்குகின்றார். அவரைக் கண்டாலே கலி தீரும்.

"அறம் மணக்கும் திருநகரே ! சில காலத்திற்கு முன்னே பாண்டி நாட்டில் பருவ மழை பெய்யாது ஒழிந்தது; பஞ்சம் வந்தது; பசி நோய் மிகுந்தது. நாளுக்கு நாள் உணவுப் பொருள்களின் விலை உயர்ந்தது; நெல்லுடையோர் நெஞ்சிற் கல்லுடையார் ஆயினர். அப்போது அன்னக் கொடி கட்டினார் சீதக்காதி " " கார் தட்டினால் என்ன? கருப்பு முற்றி என்ன? என் களஞ்சிய நெல்லை - அல்லா தந்த நெல்லை - எல்லோர்க்கும் தருவேன்" என்று மார் தட்டினார்! இதுவன்றோ அறம்?

"புகழார்ந்த கீழக்கரையே ! செம்மனம் வாய்ந்த சீதக்காதியின் புகழ் செந்தமிழ் நாட்டையும் கடத்து சென்றது. வடநாட்டை ஆண்ட அவுரங்கசீப் என்னும் அரசன் அவர் பெருமையை அறிந்தான்; அரசாங்க சேவையில் அவரை அமர்த்தினான். அவுரங்கரது ஆணை தலைக்கொண்டு சீதக்காதியார் சில காலம் வங்க நாட்டுக்



★ " ஒர்தட்டி லேபொன்னும் ஒர்தட்டி

லேநெல்லும் ஒக்கவிற்கும்
கார்தட் டியபஞ்ச காலத்தி
லேதங்கள் காரியப்பேர்
ஆர்தட் டினும்தட்டு வாராம
லேஅன்ன தானத்துக்கு
மார்தட் டியதுரை மால்சீதக்
காதிவ ரோதயனே"

- படிக்காகப் புலவர் பாட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/79&oldid=1248529" இலிருந்து மீள்விக்கப்பட்டது