80
கடற்கரையிலே
அதற்கு உரியவர் என் குருநாதரே. வாசி இருந்தால் அஃது அவர் ஆசியின் பயனே. இருமையும் தரும் அப்பெருமானிடம் என்னை ஆட்படுத்திய அண்ணல் சீதக்காதியாரை என்றும் மறக்க இயலுமோ?
"அழியாப் புகழ் பெற்ற அருங்கரையே ! செந்தமிழ் வளர்த்த சீதக்காதியார் இறந்தார் என்று அறிந்தபோது, அந்தோ ! அலறி அழுத புலவர் எத்தனை பேர் ! கதறிப் புலம்பிய கவிஞர் எத்தனை பேர் !'கோமான் கொடை மிகுந்த சீமான் - இறந்திட்டபோதே புலமையும் செத்ததுவே' என்று சரம கவி பாடினார் ஒருவர். 'தினம் கொடுக்கும் கொடையானே! தென்காயற் பதியானே! சீதக்காதி! இனி யாரை நோக்கி உயிர் வாழ்வோம்?" என்டு ஏங்கினார் பலர். 'செத்தும் கொடை கொடுப்பான் சீதக்காதி' என்று கருதி, அவர் சமாதியில் இரந்து நிற்பவர். இன்றும் பலராவர்.
"கருங்கடலே ! ஆண்டாண்டுதோறும் அழுது புரண்டாலும் மாண்டார் மீண்டு வருவதுண்டோ? சீதக்காதியார் போன்ற சீலர் பலர் இச்செந்தமிழ்நாட்டிலே தோன்றுவாராக! வாழையடி வாழையென அவ்வள்ளல் குலம் வாழ்க!" என்று வாழ்த்திச் சென்றார் உமறுப்புலவர்.