இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கால்டுவெல் ஐயர்
85
"பாண்டிப் பெருங்கடலே ! பாண்டி நாடே பழம்பதி' என்பது தமிழகத்தார் கொள்கை. அதன் உண்மையை ஆராய்ந்து அறிய வேண்டாவா? பழங்கதைகள் சொல்வதிற் பயன் உண்டா? பாண்டி நாட்டிலே பாழடைந்து கிடக்கும் பழம் பதிகள் எத்தனை ! மதில் இடிந்து கிடக்கும் மாளிகைகள் எத்தனை ! தூர்ந்து கிடக்கும் துறைமுகங்கள் எத்தனை !இவற்றையெல்லாம் துருவிப் பார்க்க வேண்டாவா? புதை பொருள்கள் கதை சொல்லுமே கற்கருவிகள் காலங் காட்டுமே ! இந்த வகையில் ஆராய்ந்து கொற்கையின் பெருமையைக் காணும் நாள் எந்நாளோ?' என்று உருக்கமாகக் கூறிக் கொற்கைக் கடலிடம் விடை பெற்றார் கால்டுவெல் ஐயர்,