பக்கம்:கடற்கரையினிலே.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18. பரிதிமாற் கலைஞர்

தென்னாட்டுக் கடற்கரை நகரங்களில் தலைமை சான்றது சென்னை. அதன் அழகிய கடற்கரையைப் புகழாதார் இல்லை. மாலைப் பொழுதில் அங்கு வீசும் மெல்லிய காற்றை நுகர்ந்து களித்திருப்பவர் பல்லாயிரவர் வேலை பார்த்துக் களைத்தவரும், வேலையின்றி இளைத்தவரும், காரில் ஏறி வருவோரும், கால்நடையாய்த் திரிவோரும் அங்கே காட்சியளிப்பர்.

மதுரையிற் பிறந்து, ஆங்கிலமும் அருந்தமிழும் ஆர்வமுறப் பயின்று, சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழாசிரியராக விளங்கியவர் பரிதிமாற் கலைஞர் என்ற சூரிய நாராயண சாஸ்திரியார். அவர் உண்மையான தமிழ்த் தொண்டர்; தமிழின் நலமே தம் நலமாகக் கொண்டவர்; ஒரு நாள் அந்தி மாலையில் சென்னை நீதி மன்றத்திற்கு அருகேயுள்ள கடற்கரைக்குச் சென்றார்; சுற்று முற்றும் பார்த்துப் பேசலுற்றார் :

"சென்னை மாநகளின் செல்வமே ! உன் அருமையை அறியாதார் இந்நகரில் உண்டோ? செல்வருக்கும் வறிஞருக்கும் நீ ஒருங்கே சுகம் தருகின்றாய்; இளைஞர்க்கும் முதியவர்க்கும் இன்பம் பயக்கின்றாய்; நல்லார்க்கும் பொல்லார்க்கும் நலம் புரிகின்றாய்  ! கலந்து பேச விரும்புவார்க்குக் களிப்பருள்வாய் நீ ! தனிமையை