பரிதிமாற் கலைஞர்
87
நாடுவார்க்கும் இனிமை தருவாய் நீ! எல்லார்க்கும் இனிய பூங்காற்றே ! நீ என்றென்றும் வாழ்க
" தமிழகத்தின் தலைநகரே ! உன்னைக் கானும் பொழுது தமிழ்ப் புலவனாகிய என் உள்ளம் களிக்கின்றது. பழம்பெருமை வாய்ந்த தமிழகத்தின் தலைநகரம் நீயே என்று கருதும் பொழுது பெரியதோர் இன்பம் பிறக்கின்றது. கன்னித் தமிழ் - என்றும் உள. தென் தமிழ் - தொன்றுதொட்டு வழங்கும் திரு நகரம் நீயே என்று எண்ணும் பொழுது என்னையும் அறியாமல் கவிதை எழுகின்றது.
" மன்னு தொல்புகழ்த் தமிழ்மகள்
நடமிடும் வளஞ்சால் சென்னை மாநகர்"
என்று உன்னைப் பாடி மகிழ்வேன்.
"அருமைத் திருநகரே ! நீ கருவாய் இருந்தபோது திருவள்ளுவரின் அருளைப் பெற்றாய் !உருவாகி வரும் பொழுது ஆழ்வார்களின் ஆசி பெற்றாய் திருத்தி வருங்கால் திருஞான சம்பந்தரால் பாடப்பெற்றாய். பெருகி வளர்ந்த பின் 'தருமம் மிகு சென்னை' என்று வடலூர் அடிகளால் வாழ்த்தப் பெற்றாய். இத்தகைய புகழ் மாலை பெற்ற நீ, எத்தாலும் சிறப்புற்றிருத்தல் வியப்பாகுமோ? புதுமை சான்ற பட்டினமே ! அந்நாளில் பட்டினம் என்றால் காவிரிப்பூம்பட்டினமே. அதுவே தமிழகத்தின் பழைய பட்டினம். இந்நாளில் பட்டினம் என்றால் நீயே! உன்னைப் பார்க்கும் பொழுது, தமிழ் நாட்டின் பழைய நிலையும் பண்பாடும் அலை அலையாக என் உள்ளத்தில் எழுகின்றன. இதோ! உயர்ந்து எழுந்து நின்று தரையிலும் தண்ணீரிலும் ஒளி வீசுகின்றதே! இதைத் 'தீபஸ்தம்பம்' என்று எவரோ சொல்லிவிட்டார் ! அப்பெயர் இந்-