பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9

சுவர் மீது மோதிக் கூழாகிவிட்டது. ஆனால் அந்தச் சண்டைக்காரப் பயல்களைத் தோற்கடித்து, அப்புறம் சமாதானமாகி விட்டதும், பாக்கியிருந்த பழங்களை நாங்கள் தின்று தீர்த்தோம்...'

       பெப்பியின் சிறிய மொட்டைத் தலைமேலே வெள்ளம் போல் பாய்ந்த வசைமாரியைக்கொட்டினாள் அந்த அம்மாள். அவனோ மிகவும் பணிவாக அக்கறையோடு கவனித்து நின்றான். 'ஆணிமுத்துப் போலே' ஒருசொல் வந்து உதிரும் போது மிகுதியும் ரசித்து காக்கைக் கொட்டி வியந்து போனான் அவன். 'ஆகா, இதுவன்றோ அழகு! என்ன சொல்லாட்சி!' என்று தான்.
       அவளது கோபம் முழுவதும் காலியாகி அவள் அடங்கியதும் அவன் உற்சாகமாகக் கத்தினான்:
      'நீ கொடுத்த அற்புதமான ஆப்பிள்களை வீசி அந்த உதவாக்கரைப் பயல்களின் சாக்கடை மண்டைகளைக் குழைய வைத்த நேர்த்தியை நீ பார்த்திருந்தால், இப்படிப் பேசியிருக்க மாட்டாய். நீ மட்டும் அதைப் பார்த்திருந்தியோ, எனக்கு நீ ஒரு ஸால்டோ என்ன, ரெண்டு ஸால்டோக்களே தந்திருப்பாய்.'
      வெற்றி பெற்றவனின் அடக்கமான க ல குணத்தைப் புரிந்து கொள்ள முடியாத அந்த அப்பாவி அம்மாள் முஷ்டியை ஓங்கி ஆட்டி பயமுறுத்தி விட்டுப் போனாள்.
      பெப்பியின் சகோதரி அவளை விட வயது அதிகமானவள் தான். ஆனால் அவனை விட அதிகச் சமர்த்து என்று சொல்லமுடியாது. பணம் படைத்த அமெரிக்கன் ஒருவன் வீட்டிலே வேலை பார்க்கப் போய்ச் சேர்ந்தாள் அவள். அதிலிருந்து அவள் தோற்றமே மாறிவிட்டது. அழகும் அலக்காரமும் சேர்ந்தன. அவளது கன்னங்கள் ரோஜாச் சிவப்பு ஏற்றன. அவளே ஆகஸ்டு மாதத்துப் பீயர் மாதிரி மலர்ந்து கனிவுறத் தொடங்கினாள்.
      'நிஜமா நீ கிதம் சாப்பிடுகிறாயா அக்கா? என்று ஒரு நாள் அவளிடம் கேட்டான்.அவன்.