பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10
      'இரண்டு வேளை, நினைத்தால் மூன்று தரம் கூடச் சாப்பிடுகிறேனே' என்று பெருமைப்பட்டாள் அவள்.
      'உன் பல்லூ தேய்த்து போகாமல் பார்த்துக்கொள்' என்று புத்தி சொன்னான் பெப்பி. பிறகு அவன் கேட்டான்: 'உங்க முதலாளி ரொம்பப் பெரிய பணக்காரரோ?'
       'ஓ, ஆமா. ராஜாவை விட அவர் பெரிய பணக்காரர்னு தான் நினைக்கிறேன்.'
       'இது பேத்தல்தான். அவருக்கு எத்தனை கால்சட்டைகள் இருக்கும், சொல்லு.'
       'சிரமமான காரியம்தான்.'
       'பத்து இருக்குமா?'
       'ஜாஸ்தியே யிருக்கலாம்.'
       'சரி. போயி எனக்காக ஒரு டிரெளசர் எடுத்து வா. கால் பக்கம் ரொம்ப நீளமாகயிருப்பது வேண்டாம். எப்படியானாலும் குளிருக்கு அடக்கமாக இருக்கக் கூடியதாகப் பாரு' என்றான் பெப்பி.
       'எதற்காகலாம்?'
       'உம். என்னிடமிருப்பதைத் தான் பாரேன்.
        அங்கே பார்ப்பதற்குப் பிரமாதமாக எதுவுமில்லை. ஏனெனில் பெப்பியின் கால்சட்டை எனத் தொங்கிய்து மிகவும் அல்பமே.
       'வாஸ்தவம், உனக்கு வேறு ஆடைகள் தேவை தான்' என்று ஆமோதித்தாள் அக்காள். 'ஆனால் நாம் அவர்கள் வீட்டில் திருடிவிட்டோம் என்று நினைக்க மாட்டார்களா?'
       'மற்றவர்களும் நம்மைப் போல் முட்டாள்களாக இருப்பார்கள் என்று நினைக்காதே. நிறைய வைத்திருப்பவர்களிடமிருந்து ஏதோ கொஞ்சம் எடுத்துக் கொண்டால் அது திருட்டே அல்ல; பங்கிட்டுக் கொள்வது. அவ்வளவு தான்.'
       'நீ பேசுவது மடத்தனம்’ என்றாள் அக்காள். ஆனால் அவள் மனக்கோளாறுகளை யெல்லாம் பெப்பி