பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



18

வேளையில், இந்த விதமான பேச்சைக் கேட்கும்போது எதுவும் சாத்தியம் என்றே தோன்றும். அங்கு எல்லாமே விசித்திரமாகத்தானிருந்தன, வலின்யார். மேகமண்டலத்தை தொட்டு நின்ற அந்த மலையருகே - எதன் குடல்களை நாங்கள் குடைந்து பொடியாக்கிக் கொண்டிருக்தோமோ அந்த மலையின் பக்கத்தில் - மனிதர்களாகிய நாங்கள் அல்பமாய் காட்சியளித்தோம்...... நான் என்ன கருத்தில் சொல்கிறேன் என்பதை உணர நீர் அதைக் கண்ணால் காண வேண்டும். மலைப்பரப்பிலே 'நாங்கள் சின்ன மனிதர்கள் தோண்டியிருக்கும் பேழ்வாயை நீர் அவசியம் பார்த்தாக வேண்டும். உதய வேளையில் நாங்கள் அதன் வழியே உள்ளே துழையும்போது, மண்ணின் குடலுக்குள் நாங்கள் துருவிச் செல்கையில் சூரியன் எங்கள் பின் துயர நோக்கெறிந்து நிற்கும். இயந்திரங்களையும், மலையின் சோக மூஞ்சியையும் நீர் பார்த்திருக்க வேண்டும்; உள்ளே இருனாழத்தில் எழும் உறுமலையும், பைத்தியக்காரனின் சிரிப்பு போல் எதிரொலிக்கும் வெடியோசைகளையும் கேட்க வேண்டும்."

       அவன் தன் கைகளை ஆராய்ந்தான்; நீல நிற மேலங்கி மீது கிடந்த உலோகத் தகட்டைத் தொட்டான்; லேசாகப் பெருமூச்செறிந்தான்.
       பிறகு பெருமையோடு பேசினான்: "மனிதனுக்குத் தெரியும் எப்படி வேலை செய்ய வேண்டுமென்று. ஆம் ஐயா! மனிதன் சிறிய பிறவியாக இருந்தாலும், உழைப்பது என்று கிளம்பி விட்டானானால், வெல்ல முடியாத சக்தியாகப் பரிணமிக்க முடியும். என் வார்த்தைகளை நம்பும்; பலவீனமான மனிதன் தான் நினைக்கிற எதையும் சாதித்து முடிக்கக்கூடிய காலம் வரப்போகிறது. என் தந்தை முதலில் அதில் நம்பிக்கை கொள்ளவில்லை.
      'ஒரு காட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு மலையைக் குடைந்து கொண்டுப் போவது, மலைகளாகிய சுவர்களை