பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
19

எழுப்பி நாடுகளைப் பிரித்து வைத்த கடவுளை எதிர்த்துச் செயல் புரிவதாகும். தேவமாதா நம்மைக் கைவிட்டு விடுவாள்' என்று அவர் சொல்வது வழக்கம். அவர் எண்ணம் தவறானது. தன்னை நேசிக்கும் மனிதர்களை தேவமாதா ஒருபோதும் புறக்கணிப்பதில்லை, போகப்போக எனது தந்தையும், நான் சொன்னேனே அது மாதிரியே நினைக்கத் தொடங்கினார். எனெனில் தான் மலையைப் பார்க்கிலும் பெரியவர், பலம் பொருந்தியவர் என அவர் உணர்ந்து விட்டார். என்றாலும், விசேஷ நாட்களில் மேஜை முன் அமர்ந்து, ஒயின் பாட்டிலை முன்னால் வைத்துக் கொண்டு, எனக்கும் மற்றவர்களுக்கும் அவர் போதனை புரிந்த காலமும் உண்டு.

      'கடவுளின் புதல்வர்களே!' அவருக்குப் பிடித்த பதங்களில் இதுவுமொன்று. ஆண்டவனுக்குப் பயந்து வாழ்ந்த நல்ல மனிதர் அவர். ஆகவே அவர் சொல்வார்: 'கடவுளின் புதல்வர்களே! இந்த வகையில் நீங்கள் மண்ணோடு மல்லாடுவது கூடாது. தனக்கேற்படும் காயங்களுக்காக அவள் பழிவாங்கிவிடுவாள். முடிவில் அவள் வெல்ல முடியாதவளாகவேயிருப்பாள். நீங்களே பார்க்கப் போகிறீர்கள். மலையின் நெஞ்சாழம் வரை நாம் நேரடியாக முன்னேறிப் போவோம். அந்த இடத்தைத் தொட்டவுடன் நாம் நெருப்பிலே தூக்கி எறியப்படுவோம். பூமியின் இதயமே கொடிய நெருப்புத்தான். எல்லோரும் இதை அறிவர். இயற்கையின் பிரசவத் துடிப்புகளுக்கு ஒத்தாசை புரியும் விதத்தில் நிலத்தை உழுவதற்காகத்தான் மனிதன் படைக்கப்பட்டான். அவள் முகத்தையோ உருவத்தையோ பாழ்படுத்த நாம் துணிவது தப்பு. பாரேன், மலையில் உள்ளே போகப் போகக் காற்று அதிக உஷ்ணமாகிறது. நமக்கு மூச்சு விடுவதே சிரமமாகத் தோன்றுகிறது...'
     மீசையை விரல்களால் முறுக்கிக் கொண்டே மெதுவாகச் சிரித்தான் அந்த மனிதன்.