உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

கொள்ள வேண்டிய விஷயங்களைச் சொல்லித் தருகிறேன்...’

தனித்தனி வகை மீன்களைப் பற்றி, எங்கே எப் பொழுது எப்படி அவற்றைப் பிடிக்கலாம் என்பது பற்றியெல்லாம் தான் அறிந்திருந்தவை அனைத்தையும் எனக்குச் சொல்ல ஆரம்பித்தார் ஆவர்.

எங்கள் நிலைமை எவ்வளவு படுமோசமாக யிருந்தது என்பதைக் கவனித்ததும் ‘இதைவிட நாம் பிரார்த்தனை செய்வது நல்லதில்லையா அப்பா?’ என்றேன். சதையிலே பதித்துக் குதறிடத் அடித்த பற்களோடு நாலாதிக்கிலிருந்தும் பாய்ந்து வரும் வெண்ணிற வேட்டை நாய்களிடையே சிக்கித் தவிக்கிற ஒரு ஜோடி முயல் குட்டிகள் போலிருந்தோம் நாங்கள்.

‘கடவுள்தான் எல்லாவற்றையும் பார்க்கிறாரே!’ என்றார் அவர். ‘தரையிலே வாழ்வதற்காகத் தாம் சிருஷ்டித்து விட்ட மனிதர்கள் இப்போது கடலிலே தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்; அவர்களிலே ஒருவன், பிழைக்கும் நம்பிக்கையை இழந்து விட்டதனால், தான் அறிந்து தேர்ந்த அனுபவ ஞானத்தையெல்லாம் தன் மகனுக்கு உணர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது என்பதையும் அவர் அறிவார். மண்ணுக்கும் மனிதருக்கும் முக்கியமானது உழைப்பு. இது கடவுளுக்குக் தெரியும்...’

தனது தொழில் முறை பற்றித் தான் அறிந்தத் அனைத்தையும் எனக்கு அறிவித்து முடிந்ததும், ஒரு மனிதன் தன் சகோதர மனிதர்களுடன் சமாதானமாக வாழ்வதற்காகக் கற்றுக்கொள்ள வேண்டியவற்றைப் பற்றியும் அவர் சொன்னர்.

‘இதுதானா எனக்குக் கற்றுத்தர வேண்டிய நேரம்? தரையிலிருக்கையில் நீங்கள் இதைச் செய்யவில்லையே?’ என்றேன்.