பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



30

'கிலத்திலே சாவு இவ்வளவு சமீபத்தில் ஒருபோதும் கின்றதில்&லயே! என்ருர்,

வெறி மிருகம் போல் ஊளையிட்டது காற்று. அலைகள் உறுமிக் கர்ஜித்தன. அதனுல் தான் சொல்வது என் காதில் விழுவதற்காக அவர் கத்திப் பேச வேண்டியிருந்தது.

'உனது அண்டை அயலில் உள்ளவர்களை விட உன்னை மட்டமாகவோ உயர்வாகவோ கருதாமல் எப்பொழுதும் சகஜமாகப் பழகு. அப்பறம் எல்லாம் சரியாகவே யிருக் கும். மோனும் செம்புடவுனும், பாசிரியும்படை வீரனும் ஒரே கட்டுக் கோப்பின் அங்கங்கள்தான் . அந்த அமைப்பிற்கு மற்ற எல்லோரும் எவ்வளவு அவசியமோ அல்வனவுக்கு நீயும் அவசியமே. அவனிடம் நல்லதை விடத் தீய பண்பே அதிகமிருக்கிறது என்று எண்ணிக் கொண்டே எந்த மனிதனேயும் நெருங்க வேண்டாம். அவனிடம் நல்ல தனமே அமையக் காண்பாய்-பிறர் எப்படி எதிர் பார்க்கிருச் கனோ அந்த வகையில் தான் மனிதர்கள் கடந்து கொள்கி மூர்கள்."

உண்மை. இவ்வளவையும் அவர் ஒரேயடியாகச் சொல்லிவிட வில்லை. அலையிலிருந்து அலைக்கென, இதோ ஆழத்திலே சரித்து தாழ்த்திட, மறுபடி உயரேஉயரே எவ் விட நாங்கள் அம்மானை ஆடப்பெற்ற போது, தெறித்த நீர்த் துளிகளிடையே பொங்கிய நுரைகளுடே மிதந்து வந் தன அவர் சொற்கள். அவர் உதிர்த்த சொற்களில் பல என் காதை வந்து அடைவதற்கு முன்பே காற்றில் அடி பட்டுப் போயின. பெரும் பகுதியை நான் புரிந்து கொள் ளவே யில்லை. பின்னே, சாவு மூஞ்சிக்கு நேரே முழித்துக் கொண்டு நிற்கையில் ஒருவன் புதிய பாடங்களை எப்படி ஐயா கற்றுக் கொள்ள முடியும்? நான் பயத்து போனேன். கடல் அவ்வளவு ஆக்காரமுற்றதை அதற்கு முன் நான் என்றுமே கண்டதில்லை; அதன் மடியிலே அவ்வித அபலை யாய் நான் என்றைக்கும் இருந்ததுமில்லை. அனுபவித்த