பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

பிறகு எல்லாம் மிகச் சடுதியில் கிகழ்ந்து முடித்தன. அசைத்து ஆடி அவை எங்களை நோக்கி முன்னேறின. நீர்ப் பாப்பின் மீது குனிந்து, எங்கள் மீதி இடிந்து விழுந்து இசுக்கத் தயசராக நின்றன. வெள்ளிய அலைகள் எங்கள் உடல்களை முன்னே எற்றித் தள்ளின. ஒருதரம்; இரண்டா வது தடவையும் ; நீண்டிருந்த பாறை ஒன் றின் அடியிலே எக்கன் தோணி கடலைக் கொட்டைபோல் நசுங்கியது ; நான் தனியணுய்ப் பிய்த்தெறியப் பட்டேன்: பாறை இனின் கன்னங்கரிய விலா விளிம்புகள் கூரிய கத்திகள் போல் இன்முன் அச்சுறுத்தி நிற்பதைக் தண்டேன்; என் தலைக்கும் மேலாக உயர்ந்த தந்தையின் தலையைக் கண்டேன்: அது அப்போதே பேய்த்தன வளைவுகளை நோக்கி உயர்த்தப்படுதலை யும் கண்டேன்.

அட்புறம் ஒன்றிரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, முதுகு முறித்து மண்டை சிதைந்த நிலையிலே அவரைக் கண் டெடுத்தார்கள். மூளையில் ஒரு பகுதி வெளியே அரித்துச் செல்லப்படுவதற்கு வகை செய்த அளவு பெரியதாக யிருந் தது அவர் மண்டையில் பட்டிருந்த காயம், அத்த இடத் தில் சாம்பல் நிறக் கட்டிகளாய் தோன்றிய பொருளை, அத னூடு ஒடிய சிவந்த ரத்த நாளங்களுடன் சேர்ந்து பளிங்குக் கல் அல்லது வெண்ணுரை ரத்தத்துடன் கலந்தது போல் தோன்றியதை, இப்பொழுது கூட நினைவில் காண முடி கிறது. பயக்கரமாய் சிதைவுற்றிருந்தது அவர் உடல் ; எனினும் அவர் முகம் களங்கமற்று, அமைதியுடன் திகழ்ந் தது. அவர் கண்கள் இறுக மூடியிருந்தன.

நானு? ஆமாம். கானும் மோசமாக மோதப்பட்டிருந் தேன். என்னை அவர்கள் கரையிலே இழுத்துப் போட்ட பொழுது நான் பிரக்ஞையற்றுக் கிடந்தேன். அமால்பித் தீவுக்கு மப்பாலுள்ள நிலத்திற்கே - எங்கள் வீட்டிற்கு வெகு துரத்திற் கப்பால்- எங்களைக் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். அங்குள்ள மக்களும் மீனவர்கள்தான்.