மனிதர்களைப் பற்றி
ரோமுக்கும் ஜினோவாவிற்குமிடையிலே ஒரு இடத்தில் கண்டக்டர் நாங்களிருந்த பெட்டியின் கதவைத் திறந்து, அழுக்குப் படிந்த தொழிலாளி ஒருவன் உதவியோடு ஒற்றைக் கண் கிழவன் ஒருவனைச் சுமந்து வந்து ஏற்றுவது போல் உள்ளே கொண்டு வந்து சேர்த்தான்.
எல்லோரும் இனிய மென்னகை சிந்தி ‘வங்கிழடு தான்’ என்று ஏகமாக ஒலிபரப்பினர்.
ஆனால் அந்தக் கிழவன் வலிமையுள்ளவனாக மாறி நின்றான். சுருங்கி வதங்கிப்போன கையை ஆட்டி தனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி அறிவித்து விட்டு, ரொம்பவும் அடிபட்டுப் பழசாகிப் போன தொப்பியை நரைத்த தலையிலிருந்து விசேஷ மரியாதை பாவத்தோடு நீக்கி விட்டு அவன் பெஞ்சுகளைத் தனது ஒற்றைக் கண்ணினால் கூர்ந்து நோக்கினான்.
‘உட்கார அனுமதிக்கிறீர்களா?’ என்று கேட்டான் அவன்.
பிரயாணிகள் கொஞ்சம் நகர்ந்து உட்கார்க்கார்கள். அவன் ஆசுவாசப் பெருமூச்செறிந்தபடி அமர்த்தான். எலும்பான முழங்கால்கள்மீது அவன் கைகள் தங்கின. பல்லில்லாத நல்லதனச் சிரிப்பால் பிரிந்தன அவன் உதடுகள்
‘ரொம்ப துாரம் போகிறீர்களா, தாத்தா?’ என்று கேட்டான் எனது துணைவன்.
‘இல்லையில்லை. இங்கிருந்து மூன்றே மூன்று கெடிகள் தான்’ என்பது அக்கிழவனின் உடனடிப் பதிலாக