பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

"என் தந்தை இறந்த போது எனக்குப் பதிமூன்று வயது. இப்பொழுது இருக்கிறதைவிடச் சிறியதாகத் தான் தோன்நினேன் அன்று. ஆனுல் வேலை என்று வந்து விட் டாலோ தான் சோர்வேயற்ற ஏக உற்சாகமாகத்தானிருந் தேன். என் அப்பாவிடமிருந்தி, எனக்கு வந்து சேர்த்தது இந்தக் குணம் ஒன்றுதான். ஏனென்ருல், இருந்த கடனை அடைப்பதற்காக எங்கள் நிலத்தையும் வீட்டையும் விற்க வேண்டியதாயிற்று, ஆகவே எங்கெங்கே வேலை கிடைக் மோ அங்கெல்லாம் நான் என் ஒற்றைக் கண்ணையும் இரண்டு கைகலையும் வைத்து வேலை செய்தே பிழைக்க சேர்க்கது...அது கஷ்டமாகத்தா னிகுந்தது. ஆனுல் வாலி பம் க்ஷ்டங்களைக் கண்டு பயப்படுவதில்லை. சரிதானே?

எனக்குப் பத்தொன்பது வயதான போதுதான், நான் காதலிக்க வேண்டும் என்று விதிக்கப் பெற்ற பெண்ணைச் சத்தித்தேன். அவளும் என்னைப் போல ஏழைதான். ஆனுல் உடலூலம் பெற்ற பெண்; என்னைவிடப் பலசாலி. சீக்காளியான கிழட்டுத் தாயோடு வசித்து வந்தாள். அவ ளும் என்னைப் போலவே, எதிர்ப்பட்ட வேலை எதுவானு னும் அதைச் செய்து பிழைத்து வந்தாள். குறிப்பிடத் தகுந்த அழகு வாய்ந்தவளல்ல அவள். ஆயினும் அன்பு மிகுந்தவள்; அவளுக்கு நல்ல தலையிருந்தது. நல்ல குரலும் கூட. ஆ, அவள் என்னமாய் பாடுவாள் தெரியுமா! தொழிற் பாடகி மாதிரியே தான். நல்ல குரல் இருக்கிற தென்மூலே அதற்கு மதிப்பு தனி தான். நான்கூடப் பழு நில்லாமல் பாடுவது வழக்கம்.

காம் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று அவ னிடம் ஒரு நாள் நான் கேட்டேன்.

'அது முட்டாள்தனமாகத் தான் முடியும், ஒற்றைக் கண்ணரே! உன்னிடமும் சரி, என் கிட்டேயும் சரி, எது வுமே கிடையாது. நாம் எப்படி வாழ்க்கை கடத்துவது ? என்று துயரத்தோடு சொன்னுள் அவள்.