பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

அதுதான் முழு உண்மை. அவளும் நானும் வக்கற்றவர்கள்தான். ஆனால் காதல் கொண்டு விட்ட இளம் ஜோடிகளுக்கு வேறு என்ன வேண்டும்? காதலுக்கு இதர தேவைகள் மிகச் சொல்பம்தான் என்பது உங்களுக்கே தெரியும். எனது கருத்தை வலியுறுத்தி நான் வெற்றி பெற்று விட்டேன்.

'நல்லது. நீ சொல்வதும் சரிதான்' என்று இடா சொன்னாள். 'பரிசுத்த தேவமாதா இப்போது தனியாக வசிக்கும் உனக்கும் எனக்கும் உதவி புரிகிறாளே; நாம் இரண்டு பேரும் சேர்ந்து வாழத் தொடங்கினால் நமக்கு உதவிசெய்வது அவளுக்கு எவ்வளவோ சுலபமான காரியமாகி விடும்!’

ஆகவே நாங்கள் பாதிரியாரைத் தேடிப் போனோம்.

'இது பைத்தியக்காரத்தனம்' என்றார் அவர், 'லிகரியாவில் இப்பொழுதுள்ள நிலையில் போதுமான பிச்சைக்காரர்கள் இல்லாமலா போனார்கள்? இன்பமற்ற மனிதர்களே, நீங்கள் சைத்தானின் விளையாட்டுப் பொம்மைகள்; அவன் தூண்டுதலைத் தகர்த்தெறியுங்கள். இல்லையோ, உங்கள் பலவீனத்தின் விலையாக நீங்கள் கடுமையான காணிக்கை செலுத்த நேரிடும்.”

சமுதாயத்திலுள்ள இளம் வெட்டுகள் எங்களைப் பார்த்துச் சிரித்தன; கிழடு கட்டைகள் எங்களைக் கண்டித்தன. ஆனால் வாலிபம் பிடிவாதம் நிறைந்தது, தனது போக்கிலே புத்திசாலித்தனமானது! கல்யாண நாள் வத்து சேர்ந்தது. முந்திய காலத்தை விட அன்றையப் பார்த்து நாங்களொன்றும் அதிகப் பணக்காரர்களாகி விடவில்லை. எங்கள் கல்யாண இரவிலே எங்கே கிடந்து தூங்குவது என்கிற விஷயம் கூட எங்களுக்குப் புரியவில்லை.


'வயல் வெளிகளுக்குப் போவோம். ஏன் கூடாது? மக்கள் எங்கிருந்தாலும் சரி, தேவமாதா அவர்களிடம்