பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

லாம் என்றுதான் சொல்கிறேனே! இடா சிரித்தாள், அழு தாள். நானும் கடத்தான். மற்றவர்கள் எல்லோரும் சிரித் தார்கள் - கல்யாண நாளிலே அழுவது மோசமான விஷ யம்தானே. ஆகவே எங்களைச் சேர்த்தவர்கள் எல்லாரும் எங்களைக் கேலி செய்து சிரித்தார்கள்.

வலின்யாசி, நமது சொந்தக்காரர்கள் என்று சொல்லிக் - கெள்வதற்கு மனிதர்கள் இருந்தாலே அதன் இனிமை தனிதான். அதிலும் அவர்கள் நம்க்குச் சொந்தமானவர் கள், மிகவும் நெருங்கியவர்கள், நமது வாழ்க்கையை அற்ப மாகவும் நமது இன்பக்தை விளையாட்டுப் பொருளாகவும் கருதாத உண்மை மனிதர்கள் அவர்கள் என்று உணர்ந்தால் இதன் ஆனக்கமே அலாசிதான்.

அடாடா என்ன அருமையான கல்யாணம் அது! என்ன அற்புதமான தினம்! சமுதாயம் பூராவும் அவ் விசேஷத்திற்கு விஜயம் செய்தது. ஒவ்வொருவரும் எங்கள் தொழுவத்திற்கு வந்ததனுல் அது அவ்வேளையிலேயே செல்வமய மாளிகையாக மாறிவிட்டது... எல்லாம் எங்க னிடமிருந்தன! ஒயினும் பழமும், மாமிசமும் ரொட்டியும், ஒவ்வொருவரும் உண்டார்கள்; எல்லோரும் உற்சாகமாக யிருக்கார்கள். அது ஏனென்ருலோ, வலின்யாரி, மக்க ளுக்கு நல்லது செய்வதைவிட உயர்ந்த இன்பம் வேறெதுவு மில்லை. என்ன நம்புங்கள், அதைவிட இனியது, அதனி னும் அதிக அழகானது வேமுென்றும் கிடையாது.

பாதிரியார் கூட வந்து விட்டார். அவர் அழகான தொரு பிரசங்கம் செய்தார். அவர் சொன்னுர்:

'உங்கள் எல்லோருக்கும் உழைத்தவர்கள் இரண்டு பேர் இதோ இருக்கிருர்கள். அவர்கள் வாழ்விலேயே மிகச் சிறத்ததாக இந்நாள் விளக்கும்படி நீங்கள் உங்களால் இயன் றவை அனைத்தையும் செய்து விட்டீர்கள். எது எப்படி நடக்கவேண்டுமோ, அப்படியே யாயிற்று. உங்களுக்காக