பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6

மாதிரித் தோன்ற வீண் பாடுபடும் அமெரிக்கன், கிலுகிலுப்பைப் போல் ஒயாக்கூச்சல் கிறைந்து ஒப்பற்று விளங்கும் பிரெஞ்சுக்காரன் - எல்லோரும் எல்லாமும் பெப்பிக்கு வித்தைப் பொருள்களேயாகும்.

        பெரியகனப் பண்பால் ஊதி, அதனால் தலை ரோமங்கள் கூடக் குத்திட்டு நிற்குமோ என்னும்படியாக மிளிரும் ஜெர்மானியனை ஒளி நடமிடும் தன் கண்களால் நோக்குவான் பெப்பி. 'மூஞ்சியைப் பாரடா! என் வயிறளவு பெரிசு இருக்கும் போல் தோணுதே இவன் மூஞ்சி' என்று சொல்லினான் தன் தோழர்களிடம்.
         ஜெர்மானியனைப் பிடிக்காதுதான் பெப்பிக்கு. வீதிகன், மைதானங்கள், நகர மக்கள் ஒயின் குடித்து சீட்டாடி பத்திரிகை படித்து அரசியல் பிரச்னைகளை அலசிப் பிழிந்து தள்ளும் இருண்ட சிறு கடைகளிலெல்லாம் ஒலிக்கும் எண்ணங்களையும் கருத்துக்களையும் பிரதிபலிப்பவன் அவன்.
         'ஏழைத் தெற்கத்தியான்களாகிய நமக்கு பால்கன் காட்டு ஸ்லாவ் இனத்தினர்தான் நெருங்கிய சொந்தக்காரர்கன்; நமது நேசதேச சகாக்கள் என்று சொல்லி, நம் நட்புக்குப் பதிலாக ஆப்பிரிக்க மண்ணே அள்ளி நமக்குத் தாராளமாகக் கொடுத்தார்களே அந்தப் புண்ணியவான்களை விட அவர்கள் நமக்கு வேண்டியவர்கள் தான்’ என்று சொன்னார்கள்.
          தெற்கத்திய எளிய மக்கள் இதையே திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டார்கள். பெப்பி எல்லாவற்றையும் கேட்பதுண்டு; எதையும் மறப்பதில்லை.
          கத்தரிக்கோல் போன்ற கால்களை இழுத்து இழுத்துப் போட்டுக் கொண்டு தள்ளாடி நடக்கிறான் இங்கிலீஷ்காரன் ஒருவன். அவன் முன்னால் போய் பெப்பி ஒப்பாரியையோ அழுகுணிச் சிந்துவையோ ஒலமிடுவது போல் இழுப்பான்: