பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

சொன்னான். ஸ்பெயின் தேசத்துச் சிங்கார ஆபரணங்கள் இவைதாம் என்று சொல்லி, அவன் கையில் இரும்புக் காப்புகளைப் பூட்டினான்; விலங்குகளை மாட்டினான். அப்படியே அவனை இழுத்துக் கொண்டு போய்ச் சிறையில் அடைத்தான். அங்கே டாயினோத் தலைவன் கவோனாபோ பல்லைக் கடித்துக் கொண்டு ஆத்திரத்தோடு உறுமியதைப் பார்த்த போது, அடைப்பட்ட சிங்கம் கர்ச்சிப்பது போலவே இருந்தது.

கொலம்பஸ் டாயினோக்களை அன்பாக நடத்த வேண்டும் என்றுதான் எண்ணியிருந்தான். அரசரும் அரசியும் அவ்வாறுதான் கூறியனுப்பியிருந்தார்கள். ஆனால், பின்னால் ஏற்பட்ட தங்கத் தேவை, அவனையும், ஓஜிடா. மார்கரிட் போன்றவர்களின் பாதையிலேயே செல்லும்படி செய்து விட்டது. இஸ்பானியோலா முழுவதும் ஆங்காங்கே கோட்டைகள் கட்டப்பெற்றன. பதினான்கு வயதுக்கு மேற்பட்ட இந்தியர்கள் அனைவரும் கட்டாய வேலைக்கு ஆட்படுத்தப்பட்டனர். ஒவ்வொரு வரும் நான்கு பருந்து மணியளவு தங்கப் பொடி அரித்துக் கொடுக்க வேண்டுமென்று சட்டம் செய்யப் பெற்றது. இச் சட்டத்தை மீறியவர்கள் ஈவு இரக்கமின்றிக் கொல்லப் பட்டார்கள். இந்தக் கொடுமைக்கு அஞ்சி மலையடிவாரங்களுக்கு ஓடிய இந்தியர்கள் வேட்டையாடிக் கொல்லப் பட்டார்கள். அதற்கும் தப்பியவர்கள் பசி பட்டினியாலும்; தங்கள் துயர வாழ்க்கையை நொந்து கசாவா நஞ்சையுண்டும் இறந்து போனார்கள். 1492-ஆம் ஆண்டு இரண்டரை லட்சம் மக்கள் இருந்தார்கள். கொலம்பஸ் துவக்கி வைத்த இந்தக் கொடுமை காரணமாக 1508-இல் இஸ்பானியோலா முழுவதிலும் இருந்த டாயினோக்களின் எண்ணிக்கை அறுபதினாயிரம்தான். இதே அக்கிரம வழியைப் பின்னால் வந்தவர்களும் பின் பற்றியதால் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஐநூற்றுக்கும் குறைவான இந்தி-