பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

107

அதே வாரத்தில் ஆப்பிரிக்காவைச் சுற்றிக்கொண்டு. இந்தியாவில் உள்ள கள்ளிக்கோட்டையைப் போய்ச் சேர்ந்துவிட்டான், போர்ச்சுகீசியனான வாஸ்கோடகாமா.

இந்த முறை கொலம்பஸ் தென் திசையில் அதிகமாகக் கீழிறங்கிச் செல்லலானான். ஜான் அரசரின் கண்டத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, தங்கம் அதிகமாகக் கிடைக்கும் இடத்தையும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆசை கொலம்பசுக்கு.

மடெய்ரா, கோமாராத் தீவுகளில் சற்றுச் சற்றுத் தங்கி போலிஸ்டா என்ற துறைமுகத்தில் ஆட்டுக்கறி வாங்கி உப்புக்கண்டம் போட்டுக்கொண்டான். அந்தத் துறைமுகத்தில் மாட்டுக்கறி கிடைக்கவில்லை. சாட்டியாகோ என்ற துறைமுகத்தில் மாடுகள் கிடைக்குமா என்ற எண்ணத்தில் ஒரு வாரம் தங்கினான் மாடுகள் கிடைக்கவில்லை. மாலுமிகள் சிலருக்கு நோய் வந்தது தான் மிச்சம்.

எத்தனையோ கஷ்டங்களுக்குப் பிறகு கப்பல்கள் ஆகஸ்டு மாதம் முதல் தேதி, டிரினிடாடு தென்கரையை வந்தடைந்தன. கொலம்பஸ் எதிர்பார்த்தபடியே ஒருவிரி குடாவில் நல்ல நீரோடும் ஆறு ஒன்று வந்து கடலில் கலந்தது. குளிர்ச்சியும் சுவையும் மிகுந்த நீர் நீறைந்த அந்தச் சிற்றாற்றில் இறங்கிக் குடைந்து குடைந்து நீராடி மகிழ்ந்தார்கள் மாலுமிகள். எத்தனையோ நாட்களாகக் குளிக்காமல் வியர்த்து உப்பூறி நாறிப்போயிருந்த தங்கள் உடல்களை நன்றாகத் தேய்த்துக் குளித்து ஆனந்தமனுபவித்தார்கள். குளித்தபின், ஆடிக் கொண்டும், பாடிக்கொண்டும் அருகில் இருந்த காட்டுக்குள் சுற்றித் திரிந்துவிட்டு வந்தார்கள்.

அங்கிருந்து புறப்பட்டு டிரினிடாடிலுள்ள இகாகோஸ் முனையருகில் நங்கூரம் பாய்ச்சி மாலுமிகளைக் கரை-