பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

லில் வேலைக்குச் சேர்ந்துகொண்டான். ஒருமுறை ஜினோவா வணிகர்களுடன் அவர்களுடைய கப்பலில் சீயோஸ் தீவுக்கு ஒரு பயணம் சென்று வந்திருக்கிறான்.

1476-ஆம் ஆண்டு மேமாதம் ஜினோவாவிலிருந்து வட ஐரோப்பாவிற்கு விலையுயர்ந்த சரக்குகளை ஏற்றிக் கொண்டு ஒரு கப்பற் படை புறப்பட்டது. இந்தப் போர்க் கப்பல்களில் ஒன்றின் பெயர் பெச்செல்லா. இந்தக் கப்டலில் ஒரு மாலுமியாக வேலை பார்த்துக்கொண்டிருந்தான் கிரிஸ்டாபர். ஆகஸ்டு மாதம் 13-ம் நாளன்று ஜிப்ரால்டர் நீர்க் கணவாயைக் கடந்து போர்ச்சுக்கலின் தென் கரை சென்றுகொண்டிருக்கும்போது, பிரஞ்சுக் கப்பற் படையொன்று எதிர்ப்பட்டுத் தாக்கியது. பகல் முழுவதும் ஓயாத சண்டை! இரவில் போர்த் தாக்குதலின் விளைவாக மூன்று ஜினோவாக் கப்பல்களும் நான்கு பிரெஞ்சுக் கப்பல்களும் உடைந்து கடலில் மூழ்கிப் போயின. இந்த அவகதிக்கு ஆளான கப்பல்களிலே பெச்சல்லாவும் ஒன்று. கிரிஸ்டாபர் அடிபட்டுக் காயமுற்றுக் கடலில் விழுந்து விட்டாலும் மிதந்துகொண்டிருந்த ஒரு பெரிய துடுப்புக் கட்டையைப் பிடித்துக்கொண்டான். அதன்மேல் சாய்ந்து கொண்டும், மாறி மாறி உதைத்துக் கொண்டும் ஆறுமைல் தூரம்வரை சென்று கரையில் ஒதுங்கினான். அவன் கரை ஒதுங்கிய இடத்தின் பெயர் லாகோஸ் என்பதாகும். அந்த ஊர் மக்கள் அவனிடம் அன்பு பாராட்டினார்கள். அவன் உடல் நலமடையும்வரை வைத்திருந்து, பின் அவன் தம்பி பார்த்தலோமியோ, லிஸ்பன் நகரில் இருக்கும் செய்தி யறிந்து அங்கு அனுப்பிவைத்தார்கள்.

ஜரோப்பாவிலேயே அந்தக் காலத்தில் போர்ச்சுக்கல் மிக முன்னேற்ற மடைந்திருந்தது. எழுச்சியும் உணர்ச்சியும் நிறைந்த போர்ச்சுகல் நாட்டின் தலைநகரான லிஸ்பன் எழிலும் தொழிலும் நிறைந்த பட்டினமாக விளங்கியது.