பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

அந்தக் குரங்குக் கூட்டம் ஸ்பானியர்களைக் கண்டு தங்கள் - பற்களைக் காட்டி, வரவேற்றது. அமெரிக்கக் கண்டத்தின் நிலப்பகுதியில் கொலம்பஸ் முதன் முதலாகக் காலடி எடுத்துவைத்தது அந்தத் துறைமுகத்தில் தான். ஆனால், கொலம்பசுக்கு தான் அப்போது ஒரு பெரிய கண் டத்தில் இறங்கியிருப்பதாகத் தெரியாது. பரியாத் தீப கற்பத்தையே அவன் ஒரு பெரிய தீவு என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தான். அவன் அமெரிக்கக் கண்டத்தில் காலடி வைத்த நாள் ஒரு ஞாயிற்றுக்கிழமை. 1498-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ம் நாள் தான் அது.

மற்ற தீவுகளில் செய்தது போல் அந்த இடத்தையும் ஸ்பெயினுக்கு உரிமையாக்கும் சடங்கைச் செய்யவேண்டும். ஆனால் சுற்றிலும் கூடியிருக்கும் குரங்குகளின் முன்னிலையில் அவன் அந்தப் புனிதச் சடங்குகளைச் செய்ய விரும்பவில்லை. அந்த நாட்டுக்கு உரிய மக்கள் சிலரையாவது முன்னால் வைத்துக்கொண்டு செய்வதுதான் பொருத்தமாகும் என்று நினைத்தான். நட்புரிமை பூண்ட சில சிவப்பு இந்தியர்கள் கப்பல்களை அணுகினார்கள். கொலம்பசுக்கு அப்போது உடல் நலம் சரியில்லை. ஆகவே கப்பல் தலைவன் பெட்ரோடி டெரிரோஸ் என்பவனை அந்த நிலப்பகுதியை உரிமையாக்கும் சடங்கைச் செய்யுமாறு அனுப்பினான். அவனும் அந்தச் சிவப்பு இந்தியர்கள் முன்னிலையில் பரியா நிலப்பகுதியை ஸ்பெயினுக்கு உரிமையாக்கும் சடங்கைச் செய்து முடித்தான்.

பாசி மாலைகளும், பருந்து மணிகளும், சர்க்கரையும் கொடுத்தவுடன், சிவப்பு இந்தியர்கள் கப்பலடிக்குத் திரண்டு வந்தார்கள். இந்தப் பொருள்களைப் பெறுவதற்காக அவர்கள் தங்கள் கைவசமுள்ள எந்தப் பொருளையும் தந்துவிட ஆயத்தமாயிருந்தனர். அவர்கள் தங்கள் கழுத்துகளிலும் கைகளிலும் அணிந்திருந்த ஆபரணங்கள். தங்க-