பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111

மும் செம்பும் கலந்த உலோகத்தால் ஆனவை. இவர்களுக் குத் தங்கத்தை விடச் செம்பே உயர்வாகப் தோன்றியது. காரணம், செம்பு உள்நாட்டில் மத்திய பகுதியில் தான் கிடைத்தது. தங்கமோ அவர்கள் இருக்கும் பகுதியிலேயே கிடைத்தது. ஆகவே அவர்கள் இரண்டையும் உருக்கிக் கலந்து உருவாகிய உலோகத்தால் ஆபரணங்கள் செய்து கொண்டார்கள். கொலம்பஸ் ஒரு புதிய பெரு நிலத்தை. மட்டும் கண்டுபிடிக்கவில்லை. ஒரு தனி நாகரிகம் படைத்த இனத்தினர் வாழும் பகுதியிலும் நுழைந்திருந்தான்.

கொலம்பஸ் அந்த நிலப்பகுதி முழுதும் சுற்றிப் பல துறைமுகங்களை ஆராய்ந்தான். ஒரு துறைமுகத்தில், ஒரு. கிராமத்துப் பெண்கள் பலர் கப்பலுக்கு வந்தார்கள். அவர்கள் கழுத்துக்களில் ஒளி வீசும் முத்துக்கள் பதித்த. அட்டிகைகளை அணிந்திருந்தார்கள். பருந்து மணிக்கும், பாசி மாலைக்கும் அவர்கள் அந்த அட்டிகைகளைக் கழற்றிக் கொடுத்து விட்டார்கள். அவர்கள் கையில் வேறு முத்து அட்டிகைகள், இல்லாததால் கொலம்பஸ் தன் ஆசையை அடக்கிக் கொண்டான். அவர்களை விசாரித்தபோது, தீபகற்பத்தின் மறு பகுதியில் ஏராளமாக முத்துக் கிடைப்பதாகக் கூறினார்கள். திரும்பும் போது அங்கு செல்லலாம் என்றிருந்தான்; ஆனால் அந்தப் பாதையில் அவன் திரும்பவில்லை. பொதுவாக அந்தப் பகுதி மக்கள் அன்பும் பண்பும் உடையவர்களாக இருந்தார்கள். ஓரூரில் இருந்த பெரிய கூரை வீட்டில், ஒரு கப்பலைச் சேர்ந்த மாலுமிகள் அனை வருக்கும் நல்ல விருந்து வைத்தார்கள். வயிறு புடைக்க உண்டுவிட்டு, ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் மாலுமிகள் கப்பலுக்குத் திரும்பி வந்தார்கள்.

பல துறைமுகங்களைப் பார்த்துக்கொண்டே கப்பலை மேற்றிசையில் செலுத்திய கொலம்பஸ் ஆகஸ்டு 15-ம் நாள் ஒரு தீவைக் கண்டான். அந்தத் தீவில் இறங்காமலே அதற்கு