பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

117

கள்ளங்கபடமறியாத மக்கள், எங்கிருந்து வந்தோ குடியேறிய யாரோ ஒருவன் செய்த சட்டத்திற்குத் தங்கள் மனித உரிமைகளைப் பரம்பரை பரம்பரையாக இழக்கும்படி நேரிட்டது. தங்கள் நாட்டுக்கு வந்தவர்களை அன்பு கொண்டு வரவேற்று தங்கள் உடைமைகளையெல்லாம் அள்ளிக் கொடுத்து உபசரித்த அந்த பண்புமிக்க மக்கள் பரம்பரை யடிமைகளாக வேண்டிய இந்தப் பேரிடியை வாய்பேசாது தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது.

கொலம்பசின் துரதிர்ஷ்டம் இத்தோடு நிற்கவில்லை. 1498-ம் ஆண்டில் ஸ்பெயினுக்குத் திருப்பியனுப்பிய சோரியோ என்ற அவனுடைய தலைமைக் கப்பலில் அரசருக்கும் அரசியாருக்கும் அவன் அனுப்பிய குறிப்புப் புத்தகத்தையும், நிலவழி காட்டும் படத்தையும் ஓஜிடா என்பவன் கைப்பற்றிக் கொண்டான். ஒரு கப்பல் தலைவனுக்கு வேண்டிய முக்கியமான இந்த இரண்டு பொருள்களையும் கைப்பற்றிக் கொண்ட ஒஜிடா, அரசியின் அனுமதி பெற்று பரியா மாநிலத்தில் முத்துக் கண்டுபிடிக்க பயணம் புறப்பட்டு விட்டான். அவன் தன்னுடன், நிலப்படம் வரைபவர்களான ஜூலான் டி லாகோசா என்பவனையும் அமெரிகோ லெஸ்பூசி என்பவனையும் அழைத்துச்சென்றான். கொலம்பஸ் மூன்றாவது முறையாகச் சென்ற வழியில் சென்று முத்துக்கள் கிடைக்கும் மார்கரிட்டாவையடைந்து ஏராளமான முத்துக்களைக் கப்பலில் ஏற்றிக் கொண்டான். அரூபா, குராக்காவோ, மராக்கைபோ வளைகுடா முதலியவற்றைக் கண்டுபிடித்துத் திரும்பும் வழியில் சாரகுலா வந்து ரோல்டானுடன் சேர்ந்து கொண்டான். பிறகு அவனுடன் சண்டையடித்துக் கொண்டு, புறப்பட்டு, பஹாமாவில் இறங்கி சிவப்பு இந்தியர்களை வேட்டையாடிப் பிடித்து அடிமைகளாகக் கப்பலில் ஏற்றிக்கொண்டு ஸ்பெயினுக்கு வந்து சேர்ந்தான், சாண்டா மேரியா கப்ப-

கொ–8