பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

ஆனால். அவர்கள் எச்சரிப்பையும் மீறிக் கொலம்பஸ் அந்த ஊர் நோக்கிச் சென்றான். ஓவாண்டோ திருப்பியனுப்பும் கப்பல்களில் கடிதம் எழுதிக் கொடுத்துவிடலாம் என்பதற்காகவே அங்கு சென்றதாக கொலம்பஸ் சமாதானம் கூறினான். மேலும், ஒரு புயல் இரண்டொரு நாளில் உருவாகக் கூடும் என்று எதிர்பார்த்தான்.

சாண்டோ டோமிங்கோவை நெருங்கிய கொலம்பரை தன் கப்பல் தலைவர்களில் தலைமையான ஒருவனைக் கரைக்கு அனுப்பினான். கவர்னர் ஓவாண்டோவுக்கு அந்தக் கப்பல் தலைவன் மூலம் கொலம்பஸ் ஒரு கடிதம் கொடுத்துவிட்டான். தன் கப்பல்கள் அங்கு தங்குவதற்கு அனுமதி கேட்டு எழுதியிருந்தான் கொலம்பஸ். அத்துடன் மட்டுமல்லாமல், இரண்டொரு நாட்களில் புயல் உருவாகக்கூடும் என்ற செய்தியையும் குறிப்பிட்டு. கப்பல்கள் எங்கேனும் புறப்படுவதாயிருந்தால் இரண்டு நாட்களுக்குப்பின், புயல் நின்ற பிறகு புறப்படலாம் என்றும், எல்லாக் கப்பல்களுக்கும் இருபுறமும் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் எச்சரித்தும் எழுதியிருந்தான்.

அகங்காரம் பிடித்த ஓவாண்டோ, கொலம்பஸ் அரும் பாடுபட்டுக் கண்டுபிடித்த ஒரு நாட்டுக்குத்தான் தான் கவர்னராயிருக்கிறான் என்பதையும் எண்ணிக்கூடப் பார்க்காமல், இந்தக் கடிதத்தைத் தன் ஆட்கள் முன்னிலையில் வேடிக்கையாகப் படித்தானாம்! அக்கடிதத்தில் உள்ள சொற்களைப் படிக்கும் போது அவற்றிற்குரிய நடிப்புக்களைச் செய்து காட்டி, நையாண்டி செய்துகொண்டே படித்தானாம்! கூட இருந்தவர்கள் ஆடிப்பாடிப் பரிகசித்தார்களாம்! கொலம்பஸ் தன் கப்பல்களுடன் துறைமுகத்தில் தங்க அனுமதி வழங்க மறுத்துவிட்டான். அத்துடன் நில்லாது, கொலம்பஸ் எச்சரித்திருப்பதையும் பொருட்படுத்-