பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12


சேர்ந்தான். அந்தக் கப்பல், கம்பளியும், கருவாடும் திராட்சை மதுவும் ஏற்றிக்கொண்டு, ஐசுலாந்து, அயர்லாந்து அசோர்சுத் தீவுகள் ஆகியவற்றிற்குச் சென்று திரும்பவும் ஆங்காங்கிருந்து சரக்குகள் ஏற்றிக் கொண்டு லிஸ்பனுக்குத் திரும்பும். அந்தப் பயணத்தின் போது, சால்வே என்ற துறைமுகத்தில் அந்தப் போர்ச்சுக்கீசியக் கப்பல் ஒதுங்கியவுடன், தானக மிதந்து சென்ற ஒரு தோணியில் இரண்டு பிணங்களைக் கண்டது, நெடுநாளைக்குப் பிறகும் கொலம்பசுக்கு நினைவிருந்தது. அந்தப் பிணங்களின் அசாதாரணமான தோற்றத்தைக் கண்ட ஐரிஷ்காரர்கள், அவை சீனக்காரரின் பிணங்கள் என்று கூறினார்கள். அந்தக் கப்பலின் தலைவன், 1477-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர்ச்சுக்கலுக்குத் திரும்புவதற்கு முன்னால், ஐசுலாந்தின் வடபகுதி நோக்கி நூறு காவதம் தாரம் வரை சென்று திரும்பினார். பெரும்பாலும் அந்தக் கப்பல் ஆர்ட்டிக் வட்டத்தைத் தொட்டுவிட்டு வந்த தென்றே சொல்லலாம்.

இவ்வாறு பலவித அனுபவங்களும் பெற்ற கொலம்பஸ் தானே ஒரு கப்பல் தலைவனாகும் தகுதியை யடைந்தது வியப்பிற்குரியதல்ல.

1478-ம் ஆண்டில் ஜினோவா வாணிப நிறுவனத்தார், மடெய்ராவில் போய் சீனி வாங்கிக்கொண்டு ஜினேவாவுக்கு வரும்படி அவனிடம் ஒரு கப்பலை ஒப்படைத்தார்கள். அவர்கள் அதற்குரிய பணம் அவனிடம் கொடுத் தனுப்பவில்லை. மடெய்ராவில் சீனி விற்பவர்கள் கடனுக்குக் கொடுக்க மறுத்துவிட்டார்கள். ஆகவே கொலம்பஸ் வெறுங் கப்பலைத் திருப்பிக்கொண்டு வர நேரிட்டது. அதனால் அவர்கள் அவன்மீது வழக்குத் தொடுத்தார்கள். அந்த வழக்கின் காரணமாக 1479-ம் ஆண்டில் கிரிஸ்டாபர் கொலம்பஸ் பேரிழப்படைய நேரிட்டது. அவன் ஜினோவாவுக்குப் போனதும் அதுவே கடைசித் தடவையாகும்.