பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13



ஜினோவாவிலிருந்து லிஸ்பன் திரும்பிய கொலம்பஸ் போர்ச்சுகவில் ஓர் உயர்தரக் குடும்பத்தினர் வழிவந்த டோனா பெலிப்பா என்ற மங்கையைத் திருமணம் புரிந்து கொண்டான். டோனா பெலிப்பாவின் தந்தை பெரிஸ் டிரில்லோ. போர்ட்டோ சாண்டோத் தீவின் தலைவன். அவளுடைய தாத்தா ஜில்மோனிஸ், ஹென்றி இளவரசரின் வீரத் தோழர். அவளுடைய சகோதரன், போர்ட்டோ சாண்டோத் தீவின் ஆட்சித் தலைவனாக இருந்தான்.

மணம் நடந்த சிறிது காலம் வரை கொலம்பஸ் தம்பதிகள் பெலிப்பாவின் தாயுடன் லிஸ்பனிலேயே தங்கியிருக்தார்கள். பெலிப்பாவின் தாய், தன் கணவருடைய கப்பல் குறிப்புப் புத்தகங்களையும், கடல் வழிகாட்டும் நிலப்படங்களையும் கட்டுக்கட்டி அவருடைய நினைவுப்பொருளாக வைத்திருந்தாள். தன் மாப்பிள்ளைக்காக அவள் அவற்றை அவிழ்த்து எடுத்துக் கொடுத்தது பெரிதும் போற்றக் கூடிய செயலாகும். சில நாட்களுக்குப் பிறகு, கிரிஸ்டாபர் தம்பதிகள் போர்ட்டோ சாண்டோவில் நிலையாகக் குடியிருக்கலானார்கள். போர்ட்டோ சாண்டோவில் தான் கொலம்பஸின் மகன் டோன் டீகோ கோலன் பிறந்தான். 1482-ல் கொலம்பஸ் தன் குடும்பத்தோடு பஞ்சல் தீவில் குடியேறினான். அங்கிருந்து கோல்டு கோஸ்டுக்கு இரு முறை கப்பல் பயணம் சென்றான். அதில் ஒருமுறை அவனே தலைவனாக இருந்து கப்பலைச் செலுத்திக்கொண்டு போனான் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது முப்பத்தொன்று முப்பத்திரண்டாவது வயதில் கொலம்பஸ் முற்றிலும் தகுதி பொருந்திய ஒரு கப்பல் தலைவனாக விளங்கினான். போர்ச்சுகீசிய வாணிபக் கப்பல்களில் பலமுறை கடற் பயணம் சென்று வந்த அனுபவம் அவனுக்குப் படிந்திருந்தது. வடக்கே ஆர்ட்டிக் வட்டத்திலிருந்து தெற்கே பூமத்தியரேகை வரைக்கும் கிழக்கே