பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

கொண்டிருந்தாள். அவளைத் தொடர்ந்து சென்று ஏதாவது ஊரில் சந்திக்கலாம் என்றால் கொலம்பஸ் கையில் பணம் கிடையாது. எனவே, அருகில் இருந்த கோர்டோவா என்ற ஊரிலே காத்திருந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அவன் அரசி இசபெல்லாவைப் பேட்டி கண்டான்.

முதல் சந்திப்பிலேயே அரசி இசபெல்லாவுக்கு கொலம்பஸ் மீது ஒரு நல்லெண்ணமும் நம்பிக்கையும் ஏற்பட்டு விட்டது. இருந்தாலும் அவள் உடனடியாக அவனுக்கு அனுமதி வழங்கிவிடவில்லை. அவனுடைய திட்டத்தை ஆராய்வதற்காக அப்பொழுது அவள் ஒரு சிறப்புக்குழுவை நியமித்தாள். கொலம்பசின் பெரிய முயற்சித் திட்டத்திற்கு அனுமதி வழங்குவதா, அல்லது தள்ளிவடுவதா, அனுமதி வழங்கினால், சீமான் மெடினா சீலியின் ஆதரவில் முயற்சியை மேற்கொள்ளச் செய்வதா அல்லது அரசாங்கமே அவன் முயற்சிக்கு உதவுவதா என்றெல்லாம் ஆராய்ந்து முடிவு கூறும்படி அவள் அந்தக் குழுவை நியமித்தாள். இப்படிப்பட்ட முயற்சிகளைத் தனிப்பட்டவர்கள் மேற்கொள்ளுவதைவிட அரசாங்கமே மேற்கொள்ளுவதுதான் பொருத்தம் என்று அவள் நினைத்தாள். பலவிதமான தாமதங்களுக்குப் பிறகு கடைசியில் அரசியின் அனுமதி பெற்றுக் கொலம்பஸ் தன் பயணத்தை மேற்கொள்ளுவதற்கு ஆறு ஆண்டுகளாயின